அதிமுக - நாம் தமிழர் கூட்டணிக்கு.. ஆரம்பமே முற்றுப்புள்ளி? விக்கிரவாண்டி தேர்தல் போட்ட எண்டு கார்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியும் கூட நாம் தமிழருக்கு செல்லவில்லை. 18128 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 7,604 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 1305 வாக்குகள் பெற்றுள்ளார்.

கிட்டத்தட்ட அதிமுக - நாம் தமிழர் இங்கே அதிகாரபூர்வமற்ற கூட்டணியில் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியும் கூட நாம் தமிழருக்கு செல்லவில்லை.

naam tamilar seeman vikravandi assembly by election 2024

அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. வடக்கில் அதிமுகவிற்கு நல்ல வாக்கு வாங்கி உள்ளது. முக்கியமாக விக்கிரவாண்டியில் 36 % வாக்கு வங்கி உள்ளது. அப்படி இருக்க அதிமுகவின் இந்த வாக்குகள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி வந்தது.

அதிமுகவின் இந்த வாக்குகளை பெற தீவிரமான முயற்சிகளை பாமக, நாம் தமிழர் முயன்று வந்தது. பாமக இங்கே பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் எப்பவும் போல தனியாக போட்டியிடுகிறது.

அன்புமணி மூவ்: இங்கே அன்புமணி அதிமுகவினர் ஆதரவை கேட்டார். எம்ஜிஆர் ஜெயலலிதா போட்டோவை வைத்து அன்புமணி பிரச்சாரம் செய்தார். அதிமுக வாக்குகள் அப்படியே தங்களுக்கு வரும் என்று அன்புமணி நினைக்கிறார். அதிமுகவின் 30+ வாக்குகளை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதில் அன்புமணி தீவிரமாக களப்பணிகளை செய்து வந்தார்.

சீமான் கோரிக்கை; இன்னொரு பக்கம் சீமானும் அதிமுகவின் ஆதரவை கேட்டார். அன்புமணி போல போட்டோ எல்லாம் வைக்காமல் நேரடியாக சீமான் எடப்பாடி ஆதரவை கேட்டுள்ளார். அதில், கட்சி ஆரம்பிக்கும் முன்பு ஜெயலலிதாவை ஆதரித்து.. அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். இலங்கை போர் நடந்தது. என் சொந்தங்களை கொன்ற கூட்டத்திற்கு ஆதரவாக இருந்த காங்கிரஸ், திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு ஆதரவு அளித்தேன். அதன்பின் 2011 தேர்தலில் மீண்டும் அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பிரச்சாரம் செய்தேன்.

2014ல் மீண்டும் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தேன். எந்த பிரதி பலனும் எதிர்பார்க்கவில்லை. பணம் வாங்கவில்லை. உண்டியல் குலுக்கித்தான் பிரச்சாரம் செய்தேன். இப்போது நாங்கள் விக்கிரவாண்டியில் நிற்கிறோம். அதிமுக ஆதரவை கேட்கிறோம்.

அதிமுக - சீமான் கூட்டணி; நம்முடைய பொது எதிரி திமுக. அப்படிப்பட்ட பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். திமுக என்ற நச்சுமரத்தை வீழ்த்த வேண்டும் . அதற்கு எளிய பிள்ளைகள் எங்களை ஆதரித்து எங்களுடன் நில்லுங்கள். நான் உங்களுக்கு நின்று உள்ளேன். இந்த ஒரு தேர்தல் நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள். அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை. அப்படி இருக்க அதிமுக எங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், என்று கேட்டார்.

எடப்பாடி சீமான் கூட்டணி: கிட்டத்தட்ட அதிமுக - நாம் தமிழர் இங்கே அதிகாரபூர்வமற்ற கூட்டணியில் இருந்ததாக சொல்லப்பட்டது. முக்கியமாக விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாம்கவினருக்கு வாக்களிக்க கூடாது என்று எடப்பாடி கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது. கட்சி மாவட்ட, கிளை செயலாளர்களை போனில் அழைத்து அதிமுக வாக்கு பாமகவிற்கு செல்ல கூடாது என்று உத்தரவிட்டாராம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிக வாக்குகளை பெறுவது 2026ல் பாமகவின் சீட் பேரத்திற்கு வலுசேர்க்கும். அவர்கள் 2026ல் நம்முடன் வந்தால் அதிக சீட் கேட்பார்கள். அதற்கு இடம் கொடுக்க கூடாது. பாமகவின் அரசியல் எழுச்சிக்கு அதிமுக உதவிடக்கூடாது. திமுக எதிர்ப்பு வாக்குகள் எளிதாக பாம்கவிற்கு சென்றுவிட கூடாது. மற்ற கட்சிகளுக்கு கூட போகலாம். பாஜக கூட்டணிக்கு செல்ல கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளிடம் பேசி உள்ளாராம்.

மறைமுக கூட்டணி; இப்படி நாம் தமிழர் - அதிமுக மறைமுகமாக கூட்டாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியும் கூட நாம் தமிழருக்கு செல்லவில்லை.

18128 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 7,604 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 1305 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதனால் நாம் தமிழர் அதிமுக கூட்டணிக்கு தொடக்கமே பெரிய எண்டு கார்டு போடப்பட்டுவிட்டதோ என்று எண்ண தோன்றுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+