சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடும்ப தலைவிகளுக்கு சூப்பர் பம்பர்.. மாதம் ரூ 1500.. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள்.. அதிமுக அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ 1,500 வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளனர். பெண்கள் தினத்தன்று இல்லத்தரசிகளை குளிர்விக்கும் அறிவிப்புகளை அதிமுக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3ஆவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அதிமுக கூட்டணி விரும்புகிறது. 10 ஆண்டுகள் கழித்து இந்த முறை ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என திமுக கூட்டணி பாடுபடுகிறது.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத சூழலில் இரு தரப்பினரும் வெற்றி வாய்ப்பிற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் ரத்து, நகைக் கடன் தள்ளுபடி என்றார்.

புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி.. டைம்ஸ் நவ்-சி வோட்டர் சர்வே சொல்கிறது புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி.. டைம்ஸ் நவ்-சி வோட்டர் சர்வே சொல்கிறது

ஸ்டாலின்

ஸ்டாலின்

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால்தான் அதை செய்வார். நான் இப்போதே செய்கிறேன் என விவசாயக் கடன்கள், 6 சவரன் வரை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் ஆகியவற்றை தள்ளுபடி செய்தார்.

7 உறுதிமொழிகள்

7 உறுதிமொழிகள்

இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் திமுக சார்பில் திருச்சியில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழகம் வளர்ச்சி அடைய 7 உறுதிமொழிகளை ஸ்டாலின் வெளியிட்டார்.

ஈபிஎஸ்- ஓபிஎஸ் கூட்டாக சந்திப்பு

ஈபிஎஸ்- ஓபிஎஸ் கூட்டாக சந்திப்பு

அதில் முக்கிய உறுதிமொழியாக திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். அதிலும் மகளிர் தினத்தையொட்டி தான் அறிவிப்பதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள்

ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள்

அப்போது அவர்கள் கூறுகையில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ 1500 வழங்கப்படும். குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுதோறும் 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்ற இரு திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டுள்ளனர்.

English summary
AIADMK announces Rs 1500 for women for every month and free 6 LPG cyclinders per year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X