அமமுகவை அப்படியெல்லாம் விட முடியாது.. தினகரனை இறுகப் பற்றிய பாஜக! எல்லாம் 2021 தேர்தல் தான் காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். ஆனால் அவரை கூட்டணிக்குள் மீண்டும் கொண்டுவர வேண்டுமென தீவிரமாக முயற்சி செய்து வருகிறது தமிழக பாஜக. தினகரனிடம் அண்ணாமலை நேரடியாகவே பேசியிருக்கும் நிலையில், அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஏன் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என பாஜக விரும்புகிறது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

2021 சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் அதிமுக - பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வியதற்குக் காரணமே தினகரன்தான் என்பதால் தான் தற்போது அந்தத் தவறை செய்யக்கூடாது என விரும்புகிறதாம் பாஜக.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அதிமுக தலைமையில் இந்திய கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. கூட்டணிக்கு எடப்பாடி தான் தலைமை வகிப்பார் என அமித்ஷா கூறிவிட்டார். இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

AIADMK BJP Alliance

அதிமுக பாஜக கூட்டணி

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தற்போது விலகி இருக்கின்றனர். முக்கியத்துவம் தருவதாகவும், கடந்த மக்களவைத் தேர்தலில் ஆதரவளித்த தங்களை பாஜக கழற்றிவிட்டதாகக் கூறி இருவரும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணிக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை அழைத்து வரவேண்டும் என்பதில் பாஜக தலைமை உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில் இருவரும் கூட்டணிக்கு வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார்.

எடப்பாடி பாஜக

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்தது. தொடர்ந்து நயினார் டெல்லி பயணம் மேற்கொண்ட நிலையில் டிடிவி தினகரனை அதிமுக பாஜக கூட்டணிக்கு அழைத்து வரவேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் டிடிவி தினகரன் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியிருந்தார் தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை.

டிடிவி தினகரன்

கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி அமைவதற்கு அண்ணாமலையும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதால் ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு அண்ணாமலை கூறியதாகவும் சில தகவல்கள் வெளியானது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், பெரிய அளவில் வாக்கு சதவீதம் இல்லாத நிலையில் டிடிவி தினகரனை ஏன் பாஜக தலைமை கூட்டணிக்கு கொண்டு வர விரும்புகிறது என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன.

2021 சட்டமன்ற தேர்தல்

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களையே சில தொகுதிகளில் பாஜக கூட்டணி பின்னுக்குத் தள்ளியதற்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் தான் காரணம் என்பது பாஜக தலைமையின் எண்ணம். மேலும், 2021 சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் அதிமுக தோல்வி அடைவதற்கு அமமுக பிரித்த வாக்குகள் தான் காரணம். குறிப்பாக, 21 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்ததற்கு அமமுக வாக்குகளைப் பிரித்ததுதான் காரணம். அந்த வகையில், நெய்வேலி, விருத்தாச்சலம், நாங்குநேரி, மயிலாடுதுறை, திருமயம், கந்தர்வகோட்டை, மன்னார்குடி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தாராபுரம், தியாகராய நகர், திருப்போரூர், உத்திரமேரூர், காட்பாடி, வேப்பனஹள்ளி, காரைக்குடி, திருவாடானை, ஆண்டிப்பட்டி, பாபநாசம் மற்றும் சாத்தூரில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோன நிலையில், குறிப்பிட்ட அளவு வாக்குகளை அமமுக பிரித்ததுதான் தோல்விக்கு காரணம்.

அமமுக வாக்கு வங்கி

மேலும் 2021 தேர்தலில் திமுக 37.70 சதவீதம் வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் அதிமுக 33.29 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. அமமுக 2.35 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தாலும், அந்த மிகக் குறைந்த வாக்கு சதவீதம் தான் அதிமுக பல தொகுதிகளில் தோல்வி அடையக் காரணம். உதாரணத்திற்கு, காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 21,589 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு பாஜக வேட்பாளர் எச். ராஜா தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அமமுக வேட்பாளர் 44 ஆயிரத்து 864 வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வாக்குகள் பாஜகவுக்குச் சென்று இருந்தால், எச். ராஜா வெற்றி பெற்றிருப்பார். இதே நிலைதான் பல தொகுதிகளில் இருந்தது.

பாஜக அமமுக கூட்டணி

அமமுக பெற்ற வாக்குகளை விட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் மிகக் குறைவு என்பது கவனிக்கத்தக்கது. ஒருவேளை அமமுக வாக்குகள் 20 தொகுதிகளில் அதிமுகவுக்குச் சென்றிருந்தால், 21 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்க முடியும். ஆட்சியைப் பிடிக்க இது உதவாது என்றாலும், அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்களுக்குக் கூடுதல் எம்எல்ஏக்கள் கிடைத்திருப்பார்கள். அமமுகவும் மிகப்பெரிய ஒரு கட்சியாக உருவெடுக்க வாய்ப்பு இருந்திருக்கும். தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் அந்தத் தவறை செய்யக்கூடாது என்பதற்காகத்தான் பாஜக கூட்டணிக்கு அமமுகவை அழைத்து வரவேண்டும் என விரும்புகிறது பாஜக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+