பாஜக உடன் உறவை முறித்த அதிமுக.. இந்தியா கூட்டணியில் பாதிப்பா? என்ன சொல்கிறார் கே.பாலகிருஷ்ணன்
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி இந்தியா கூட்டணியை ஒருபோதும் பாதிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அகில இந்திய அளவில் உருவான கூட்டணி அதிமுக பாஜகவை வெல்லும் என்றும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, அதனால் எடப்பாடி சொன்னதில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதமே பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் நிர்மல்குமார் தலைமையில் ஏராளமான பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர். அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்த பல்வேறு நிர்வாகிகள் இணைந்துள்ளதால் பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.
இதனையடுத்து அண்ணாமலை ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்று கூறினார். பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் போட்டோக்களை எரித்தனர். அதே நேரத்தில் அண்ணாமலையின் போட்டோக்களை பாஜகவினர் எரித்தனர். மாறி மாறி அதிமுக, பாஜக தலைவர்கள் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகளும் பாஜக நிர்வாகிகளும் கூட்டணி நீடிப்பதாகவே கூறி வந்தனர்.
2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை மிகப்பெரிய புயலை கிளப்பினார். தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன் என்று கூறினார். அதிமுக பாஜக தலைவர்கள் இருவரும் மாறி மாறி பரஸ்பரம் தங்கள் தரப்பு கருத்துக்களை காரசாரமாகவே பதிவு செய்து வந்தனர். ஊடகங்களில் இதுவே விவாதப்பொருளானது.
இந்த சூழ்நிலையில்தான் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்த பணிகளை செய்து வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் முன்னேற்றமும் அடைந்து இருக்கிறோம் என்றார்.
தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். இதை வழி மொழிந்த எடப்பாடி பழனிச்சாமியும். பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்வதாக அறிவித்தார்.
அதிமுக பாஜக இடையே பிரச்சினை நீரு பூத்த நெருப்பாகவே இருந்தது. டெல்லி தலைமையிடம் அதிமுக தலைவர்கள் இணக்கமாகவே இருந்தாலும் அண்ணாமலையுடன் இணக்கம் காட்ட தயாராக இல்லை. இந்த சூழ்நிலையில்தான் பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த மோதலின் தொடர்ச்சியாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். ஜெயலலிதாவை விமர்சித்து மன்னிப்பு கேட்ட நிலையில் அண்ணாமலை, அண்ணாவை விமர்சித்து கொண்டிருக்கிறார் என்றார்.
அண்ணாமலை குறித்து இனி தாறுமாறாக விமர்சிப்போம் என்று கூறிய ஜெயக்குமார். இது எங்களின் தன்மானப்பிரச்சினை, பாஜக உடன் கூட்டணியில் நீடிப்பதை அதிமுக தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள் என்றே தெரிவித்தார். கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. அதிமுகவுக்குள் ஒரு குழப்பமும் இல்லை. தேர்தல் வரும் போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று ஜெயக்குமார் அறிவித்தார்.
இன்றைய தினம் அதிமுக எடுத்துள்ள மிகப்பெரிய முடிவு லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும். இந்த கூட்டணி முறிவு பற்றி அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே, இனி பாஜக உடன் கூட்டணி சேர்ந்து தவறு செய்து விட்டேன். இனி ஒருபோதும் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று தமிழ் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி தருகிறேன் என்று பகிரங்கமாக கூறியிருந்தார்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் அந்த வாக்குறுதியை காப்பாற்றினார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நடைபெற்ற சட்டசபை , லோக்சபா தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியையே சந்தித்தனர். ஜெயலலிதாவின் வாக்குறுதியை இவர்கள் மதிக்கவில்லை. அதிமுக தலைவர்கள் ஒரு பொருட்டே அல்ல என்று பாஜக தலைவர்கள் நினைக்கின்றனர். என்றைக்கு இருந்தாலும் எங்களின் மிரட்டலுக்கு அதிமுக தலைவர்கள் அடிபணிவார்கள் என பாஜக நினைக்கிறது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஏறி மிதிக்கும் வேலையை செய்கின்றனர் என்று கே. பாலகிருஷ்ணன் கூறினர்.
அதிமுக பாஜக கூட்டணி முறிவினால் திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் வராது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியா கூட்டணியாக உருவாகியுள்ளது. இந்த கூட்டணி முறிவினால் இந்தியா கூட்டணியில் பாதிப்பு வராது. அகில இந்திய அளவில் உருவான கூட்டணியால் எந்த சலசலப்பும் வராது என்று கூறியுள்ளார் கே. பாலகிருஷ்ணன்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications