செங்கோட்டையன் போகட்டும்.. ஏக தெம்பில் எடப்பாடி! கூட்டணிக்கு வரும் ‘2’ கட்சிகள்! கன்பாஃர்ம் தானாமே!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய தான் முதல்வர் வேட்பாளர் என தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் அதிருப்தியில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் தேமுதிக, பாமக அதிமுக-பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளதால் உற்சாகமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசி நேரத்தில் கூட விஜய்யை கூட்டணிக்கு அழைக்கலாம் என எடப்பாடி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது தமிழக அரசியல் களம். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்ற தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும்.. தமிழகத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை ஆட்சி அமைத்து சாதனை படைத்த கட்சியான அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தனியாக முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறது.

இதற்கு முன்பு எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையிலும், 2021ல் எடப்பாடி பழனிச்சாமி -ஓபிஎஸ் தலைமையிலும் தேர்தலை சந்தித்தது. அதற்கு பிறகு நடந்த மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.
தமிழக தேர்தல்
இந்த நிலையில் தனது முதல் சட்டமன்றத் தேர்தலை தனியாக சந்திக்க இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளரரான எடப்பாடி பழனிச்சாமி. 10 தோல்விகளை சந்தித்தவர் என எதிர்கட்சிகளும் அதிமுகவிலிருந்து விலகிய தலைவர்களும் விமர்சித்து வரும் நிலையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைப்பு காட்டி வருகிறார். இதற்காக இனிமேல் ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என பேசிய பாஜகவுடன் கூட்டணியும் அமைத்திருக்கிறார். அதே நேரத்தில் தேர்தலில் வெற்றி பெற பாஜக கூட்டணி மட்டும் போதாது என உணர்ந்துள்ள எடப்பாடி தமிழகத்தின் பிரதான கட்சிகளான தேமுதிக, பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணிக்கு அழைத்தார்.
எடப்பாடி பழனிசாமி
திமுகவுடன் தான் கூட்டணி என காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உறுதியாக உள்ளன. இதை அடுத்து தேமுதிக பாமக கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. கடந்த மாநிலங்களவை தேர்தலில் தே.மு.தி.கவுக்கும் பாமகவுக்கும் மாநிலங்களவை சீட்டு தரப்படாததால் இரு கட்சிகளுமே அதிருப்தியில் இருந்தன. அதே நேரத்தில் திமுக எதிர்ப்பு என்ற புள்ளியில் இணைந்ததால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக பாஜக கூட்டணிக்கு வர சம்மதித்துள்ளார். 25 சீட்டுகள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர சம்மதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தேர்தல் பொறுப்பாளரான பைஜயந்த் பாண்டாவும் அன்புமணியை சந்தித்து பேசிய நிலையில் அதிமுக பாஜக பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது.
தேமுதிக பேச்சு
இந்த நிலையில் தேமுதிகவின் நிலைப்பாடு தான் கேள்விக்குறியாக இருந்தது. மாநிலங்களவை சீட்டு தராததால் அதிமுக மீது அதிருப்தியில் இருந்த பிரேமலதா விஜயகாந்த் இடையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது .அதே நேரத்தில் அது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என பேசி வந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கடுமையான விமர்சனங்களை பிரேமலதா விஜயகாந்த் முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் 20 சீட்டுகள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தேமுதிகவுக்கு தர எடப்பாடி பழனிச்சாமி சம்மதித்ததாக சொல்லப்படுகிறது.
அதிமுக -பாஜக- பாமக- தேமுதிக
இதை அடுத்து அதிமுக -பாஜக- பாமக- தேமுதிக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஜனவரிக்கு பிறகு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடையே விஜய் உடன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் முதல்வர் வேட்பாளர் என்ற கொள்கையில் விஜய் உறுதியாக இருப்பதால், அந்த கூட்டணி தடைப்பட்டு போனது. இதற்கிடையே திமுக எதிர்ப்பு என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து விரைவில் தமிழக வெற்றி கழகத்துடனும் பேச்சுவார்த்தை தொடங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications