2026 எடப்பாடி தான்..அடிச்சுத் தூக்குது அதிமுக - பாஜக! திக்குமுக்காடும் திமுக..பாண்டே சொல்லும் கணக்கு
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி தற்போதைக்கு நிலவும் நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்பன போன்ற பல்வேறு கேள்விகளை வாக்காளர்களிடம் முன்வைத்து கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியா நிறுவனம் இதில் அதிமுக பாஜக கூட்டணியே முன்னணியில் இருப்பதாக அந்த கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்திருக்கிறது குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தான் அடுத்த முதல்வராக வரவேண்டும் என பெரும்பாலானோர் கூறியுள்ளனர்
2026 சட்டமன்ற தேர்தலை பொருத்தவரை தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் இருக்கின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இருக்கிறது.
அந்த கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவை பொருத்தவரை அதன் தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, தமுமுக, மஜக, தவாக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இருக்கின்றன.

தமிழக வெற்றி கழகமும், நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா நிறுவனம் தமிழகம் முழுவதும் 3,065 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறது. நான்கு பகுதிகளாக தொகுதிகள் பிரிக்கப்பட்டு இந்த கணிப்பு நடைபெற்ற நிலையில் கடந்த மக்களவை த் தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தோம் என 12 சதவீதம் பேரும், பாஜக கூட்டணிக்கு வாக்களித்தோம் என 15 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தோம் என 31 சதவீதம் பேரும் கூறியிருக்கின்றனர். அதிகபட்சமாக திமுக கூட்டணிக்கு 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக பாஜக கூட்டணியை ஆதரிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு முடிவெடுக்கவில்லை என 24 சதவீதம் பேரும், ஆதரவு அளிக்கிறோம் என 37 சதவீதம் பேரும், இல்லை என 39 சதவீதம் பெறும் கூறி இருக்கின்றனர்.
அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு 24 சதவீதம் பேர் முடிவெடுக்கவில்லை எனவும், வாக்களிப்போம் என 35 சதவீதம் பெறும் வாக்களிக்க மாட்டோம் என 41% பேரும் கூறியுள்ளனர். தமிழகத்தின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு சீமானுக்கு 7 சதவீத ஆதரவும், அண்ணாமலைக்கு 14 சதவீத ஆதரவும், விஜய்க்கு 21 சதவீத ஆதரவும் கிடைத்திருக்கிறது. தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 28 சதவீத ஆதரவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு 30 சதவீத ஆதரவும் கிடைத்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இருக்கும் வித்தியாசம் வெறும் இரண்டு சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு நாம் தமிழர் கட்சிக்கு 6 சதவீதம் பேரும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 19 சதவீதம் பேரும், திமுக கூட்டணிக்கு 34 சதவீதம் பேரும், அதிமுக கூட்டணிக்கு 41% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக திமுக இடையே கிட்டத்தட்ட ஏழு சதவீத வித்தியாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அதிமுக கூட்டணிக்கு 41% ஆதரவிருக்கிறது. திமுக கூட்டணிக்கு 30 சதவீத ஆதரவும், தமிழக வெற்றி கழகத்திற்கு 22 சதவீத ஆதரவும், நாம் தமிழர் கட்சிக்கு 7 சதவீத ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பு தெரிய வந்திருக்கிறது ரங்கராஜ் பாண்டே.












Click it and Unblock the Notifications