பாஜகவை டிக் அடித்த எடப்பாடி.. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுமா SDPI? சரியுதே கூட்டணி கோட்டை.!
சென்னை: கடந்த மக்களவைத் தேர்தலில் உடைந்த அதிமுக கூட்டணி மீண்டும் ஒட்டவைக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் நேற்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கூட்டணிக்கான அட்சரத்தை போட்டிருக்கிறார். அதே நேரத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த ஒரே இஸ்லாமிய கட்சியான எஸ்டிபிஐ தற்போது பாஜக உடனான கூட்டணி காரணமாக வெளியேறலாம் என கூறப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி இரட்டை இலை சின்னத்தில் திண்டுக்கல்லில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த நிலையில், அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது. அதற்கு பிறகு நடந்த தேர்தல்களில் கூட்டணி மாறுதல்கள் இருந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி முடிவுக்கு வந்தது.

இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என அதிமுக தலைவர்கள் திட்டவட்டமாக கூறிவந்தனர். இந்த நிலையில் திடீரென அரசியல் களம் மாறி இருக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக அலுவலகத்தை பார்வையிட செல்வதாக அவர் கூறினாலும் பாஜக முக்கிய தலைவர்களை அவர் சந்திக்கலாம் என கூறப்பட்டது.
பாஜக அதிமுக கூட்டணி: எதிர்பார்த்தது போலவே, நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, சி.வி. சண்முகம், தம்பிதுரை எம்பி ஆகியோரும் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் இவர்கள் கூட்டாக ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அமித் ஷாவை மட்டும் எடப்பாடி பழனிச்சாமி தனியே 50 நிமிடம் சந்தித்து பேசினார்.
அமித் ஷா - எடப்பாடி: சந்திப்பின் முடிவில், 2026 சட்டமன்றத் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திப்பது என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. கூட்டணி ஆட்சி என அமித் ஷாவும் உறுதி செய்திருக்கிறார். இந்த நிலையில் வரும் தேர்தலில் அதிமுக 120 தொகுதிகளிலும் பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் 114 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து 2026 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என அமித்ஷா அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்.
நிர்வாகிகள் அதிருப்தி: அதிமுக தரப்பில் எடப்பாடியின் கூட்டணி கணக்குகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் சிலரும் கூட்டணிக்கு வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். அதே நேரத்தில் சில தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாஜகவால் தான் நான் தோற்றேன் என கூறிய ஜெயக்குமார் அடுத்து என்ன முடிவு எடுப்பார் என தெரியவில்லை இப்படி அதிமுகவில் இருக்கும் தலைவர்களே அதிருப்தியில் இருக்கும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன மன நிலையில் இருக்கிறார்கள் என்பது குறித்து சில நிர்வாகிகளிடம் பேசினோம்.
திமுக கூட்டணி: கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க கட்சிகள் என்றால் அது தேமுதிக, புதிய தமிழகம், மற்றும் எஸ்டிபிஐ கட்சி தான். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் இருந்தது. பாஜக கூட்டணியில் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் இருந்தது.
எஸ்டிபிஐ கட்சி: கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளித்த ஒரே இஸ்லாமிய அமைப்பு என்றால் அது எஸ்டிபிஐ கட்சி மட்டும் தான். அந்த கட்சியின் தலைவரான நெல்லை முபாரக் திண்டுக்கல்லில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார். அந்த வகையில் திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நிலை முபாரக்குக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தது. இருந்த போதும் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார்.
நெல்லை முபாரக்: இந்த நிலையில் தற்போது அதிமுக பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாக இருக்கும் நிலையில் நெல்லை முபாரக் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என கூறப்படுகிறது. திமுக தரப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கிறது. ஆனால் அதிமுகவின் ஆதரவு கட்சியாக இருந்த எஸ்டிபிஐ பாஜக கூட்டணி காரணமாக அதிருப்தியில் இருப்பதாகவும் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் முதல் கட்சியாக எஸ்டிபிஐ இருக்கலாம் என கூறப்படுகிறது.
கூட்டணி நிலைப்பாடு: இந்த நிலையில் இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவரான நெல்லை முபாரக்கை ஒன் இந்தியா தமிழ் சார்பாக தொடர்பு கொண்டோம். அவரிடம் பேசிய போது, அதிமுக பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்து பேசி இருக்கிறார், அமித் ஷாவும் 2026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என பேசி இருக்கிறார். கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளித்த நீங்கள் பாஜக கூட்டணி குறித்து என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய உடனே, ”தற்போது நான் கல்லிடைக்குறிச்சியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் இருக்கிறேன்.. பிறகு ஒரு தருணத்தில் தொடர்பு கொண்டு பேசுகிறேன்” எனக் கூறினார்.
பாஜக: தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தனித்துப் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வென்றதில்லை. அதே நேரத்தில் திமுக அதிமுக கட்சிகளை நம்பி தான் பாஜக இதுவரை இருந்திருக்கிறது. 2001 இல் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக எச். ராஜா உள்ளிட்டோரை சட்டமன்றத்திற்கு அனுப்பியது. அதற்குப் பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் பாஜக தனித்து போட்டியிட்டு மண்ணை கவ்வியது.
அதிமுக: 2021-ல் அதாவது 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டசபைக்குள் நுழைய முடிந்தது. இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றாலும் பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பாஜக ஒரு எம்எல்ஏவை கூட பெற முடியாது என்பதால் தான் அதிமுகவுடன் கூட்டணி சேர முயன்று வந்தது.
அதிமுகவுக்கு நெருக்கடி: தொடர்ந்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள், மறைமுக நெருக்கடிகள், ரெய்டுகள் என இருந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி ஓகே சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைப்பது அரிதிலும் அரிதான நிகழ்வாக மாறியுள்ளது. அதிலும் அதிமுக கூட்டணியிலிருந்து ஒரே ஒரு இஸ்லாமிய கட்சியும் வெளியேறி இருப்பது அதிமுக மீதான சிறுபான்மை பாதுகாப்பு நம்பிக்கையை உடைத்து இருப்பதாக விமர்சிக்கின்றனர் எஸ்டிபிஐ நிர்வாகிகள்.
-
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications