எத்தனை பிரச்சனைய தான் டீல் பண்றது? எடப்பாடிக்கு எல்லாப் பக்கமும் அடி! பஞ்சாயத்தை துவக்கிய பாஜக!
சென்னை: அதிமுகவில் தான் பிரச்சினை என்றால் அக்கட்சி தலைமை வகிக்கும் கூட்டணியிலும் பிரச்சினை எழ ஆரம்பித்திருக்கிறது. பாஜகவைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக அந்த கூட்டணியில் எந்தக் கட்சியும் வரவில்லை. இந்த நிலையில் கூட்டணியில் இருக்கும் பாஜகவும் கூடுதல் சீட்டுகளைக் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஒரு சட்டசபைத் தொகுதி எனக் கேட்ட பாஜக இப்போது சில மாவட்டங்களில் கூடுதலாகத் தொகுதிகளைக் கேட்பதால் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் களம் மிகவும் சூடாகவே இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்திருக்கின்றன. திமுகவைப் பொருத்தவரை தற்போது இருக்கும் கூட்டணியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில கட்சிகள் கூடுதல் சீட்டுகளைக் கேட்பதைத் தவிர அந்தக் கூட்டணியில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. 2019ல் இருந்து அந்தக் கூட்டணி மிகவும் வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பாஜக கூட்டணி
அதே நேரத்தில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனத் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி. இதற்காக உடைந்துபோன அதிமுக-பாஜக கூட்டணியை மீண்டும் ஒட்ட வைத்திருக்கிறார். மேலும் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை எப்படியாவது மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் எனத் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க, கூட்டணியில் இருக்கும் பாஜக அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
சீட் பங்கீடு
ஏற்கனவே கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியதால்தான் செங்கோட்டையன் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்படும் நிலையில், முன்னாள் தலைவர் அண்ணாமலை எடப்பாடிக்கு எதிராக செயல்படுவதாக சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, கூட்டணிக் கட்சியான பாஜக எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.
எடப்பாடி அதிருப்தி
2021 சட்டமன்றத் தேர்தலை விட 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளைக் கேட்பதாக சொல்லப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாம் இடம் பிடித்தது. இதனால் தமிழகத்தில் தாங்கள் வளர்ந்து விட்டதாகவும், குறைந்தது 40 தொகுதிகள் கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு மக்களவைத் தொகுதிக்கு சட்டமன்றத் தொகுதியை பாஜக கேட்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த சிக்கலாக, சில மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகளை பாஜக கேட்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர் அதிமுகவினர்.
பாஜக கோரிக்கை
இது தொடர்பாக பேசிய போது," மக்களவைத் தேர்தலில் சில பாஜக வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளினர். ஆனால் அந்த மாவட்டங்களில் நாங்கள் வலுவாக இருக்கிறோம் என சொல்லி வரும் பாஜக கூடுதல் தொகுதிகளைக் கேட்கிறது. உதாரணத்திற்கு, கோவையில் இப்போது வானதி சீனிவாசன் எம்எல்ஏவாக இருக்கிறார். ஆனால் அவர் இருக்கும் தொகுதி போதாது எனவும் மேலும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளைக் கூடுதலாகக் கேட்கின்றனர். தேர்தலில் பாஜக இரண்டாவது இடத்துக்கு வந்த மதுரை, நெல்லை, கோவை, சென்னையின் மூன்று தொகுதிகள், கன்னியாகுமரி என பாஜக வலுவாக இருப்பதாகச் சொல்லப்படும் தொகுதிகளில் ஒரு தொகுதி போதாது, இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம்.
கூடுதல் தொகுதி
மேலும் பாஜகவின் முக்கிய இடங்களை வகிக்கும் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்குச் சில மாவட்டங்களில் சீட்டு வேண்டும் என்பதால் அதிமுகவுடன் கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும் என வலியுறுத்திய நிலையில், அது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பாஜக கூட்டணியில் இருக்கும் சிறிய கட்சிகளுக்குத் தனி ஒதுக்கீட்டையும் பாஜக கேட்பதாகச் சொல்லப்படும் நிலையில், 50 முதல் 60 தொகுதிகள் வரை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது என்கின்றனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications