பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக.. அடேங்கப்பா கூட்டணி? ஓபிஎஸ் பேட்டியை பாருங்கள்!
Recommended Video

சென்னை: தமிழத்ததில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தலில் பழைய நண்பர்களுடன் கூட்டணி அமைக்க பாஜக தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பேசுகையில் தெரிவித்தார்.
ஏற்கனவே அதிமுக, பாமக, தேமுதிக ஆகியவை பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகளாகும். இந்த நிலையில் இக்கட்சிகள் பாஜகவுடன் கூட்டணிக்கு தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேள்விகளும், ஓபிஎஸ் பதில்களும் என்ன என்பதை பாருங்கள்.
கே: கூட்டணி பேச்சுவார்த்தை என்ற அளவுக்குப் போய்க் கொண்டுள்ளது?
ப: தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடனடியாக பேசி, உடனடியாக முடிக்கப்படும்.

பாமக, தேமுதிக
கே: தமிழகம், புதுவை என, 20 தொகுதிகளில் அதிமுக, 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது என்றும், அந்த தொகுதிகளில் சிலவற்றை பாமக மற்றும் தேமுதிகவிற்கு வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வருகிறதே?
ப: பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு தொடர்பாக செய்திகள் வருகின்றன . அது அந்த அளவுக்கு உண்மை இல்லை. அதிகாரப்பூர்வமாக முடிவு ஏற்படுத்தப்பட்டு , முதலில் உங்களுக்கு தான் தகவல் தெரிவிக்கப்படும்.

மோடி வருகை
கே: பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம், தமிழகம் வருகை தருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள், கூட்டணி பேச்சுவார்த்தை நடக்குமா?
ப: எனக்கு தெரிந்தவரை பிரதமர் நரேந்திர மோடியின் வருகையும், சந்திப்பும், இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மோதலா
கே: சமீபகாலமாக அதிமுக மற்றும் பாஜக இடையே மிகப்பெரிய வார்த்தைப் போர் நடைபெறுகிறது. தமிழகத்தில் தாமரை மலராது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவிக்கிறார் . தமிழகத்தில் தாமரை மலருமா?
ப: அவரவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள், அல்லது இயக்கங்கள் குறித்து கொள்கை விளக்கம் கொடுப்பது வாடிக்கை. அதைத்தான் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன.

எந்த கூட்டணி
கே: உத்தர பிரதேசத்தில் 3வது அணி அமைந்துள்ளது. நீங்கள் மூன்றாவது அணியுடன் கூட்டணி சேர்வீர்களா? அல்லது தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா?
ப: அவசரப்படாதீர்கள் . பொறுத்திருந்து பாருங்கள்.. நல்லது நடக்கும்.. இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications