பாதிக்குப் பாதி.. பல்க்காக கேட்டும் பாஜக! இதென்ன பீகாரா? ஷாக் ஆகிப் போன எடப்பாடி! பரபர பாலிடிக்ஸ்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவும் பாஜகவும் மறைமுகமாக தொகுதி பங்கிட்டு பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலில் மிக குறைந்த தொகுதிகளை பெற்ற பாஜக, தற்போது 60 தொகுதிகளை கேட்பதாக சொல்லப்படுகிறது. கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 100 தொகுதிகள் எதிர்பார்க்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் செயலால் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பான தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவிடம் இருந்து 100 தொகுதிகள் வரை பெற்றுக் கொள்ள பாஜக உறுதியான நிலைப்பாடு எடுத்துள்ளதாகவும், அதில் குறைந்தது 60 தொகுதிகளில் நேரடியாக பாஜக போட்டியிட விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தல்
அதிமுக தரப்பில் இருந்து பார்க்கும்போது, 234 சட்டமன்றத் தொகுதிகளில் வெறும் 134 இடங்களில் மட்டுமே போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டால், தேர்தல் முடிவுகள் சாதகமாக இருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற முடியாத சூழல் உருவாகும் என்ற அச்சம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே, கூட்டணி அமைப்பதில் எடப்பாடி பழனிசாமி மிகுந்த தயக்கத்துடன் கணக்குப்போட்டு முடிவு எடுக்க முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
திமுக பாஜக கூட்டணி
இந்த நிலையில், அதிமுகவில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல்களும் தலைமைக்கு சவாலாக பார்க்கப்படுகின்றன. மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது, கட்சிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைவார் என்ற தகவல்களும் பரவலாக பேசப்படுகின்றன. அது நடந்தால், கட்சியின் ஒருங்கிணைப்புக்கும், தேர்தல் தயாரிப்புக்கும் கூடுதல் பலம் கிடைக்கும் என அதிமுக தரப்பினர் நம்புகின்றனர்.
தொகுதி பங்கீடு
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும், சுமார் 23 சதவீத வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், 28 தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது கட்சியின் அடிப்படை வாக்கு வங்கி இன்னும் நிலையாக இருப்பதை காட்டுவதாக கூறப்படுகிறது. அதே தேர்தலில், பாஜகவும் தனித்தனியாக போட்டியிட்டு 11 தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
எடப்பாடி பழனிசாமி
இதனை அடிப்படையாகக் கொண்டு, சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இணைந்தால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என இரு கட்சிகளும் கணக்கிடுகின்றன. ஆனால், தொகுதி பங்கீட்டில் பாஜக கடுமையான கோரிக்கைகளை முன்வைப்பதால், பேச்சுவார்த்தை எளிதாக முடிவுக்கு வரவில்லை. அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, பாஜகக்கு 60 தொகுதிகள், பாமகவுக்கு 30 தொகுதிகள், மற்ற சிறிய கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் என மொத்தம் 100 இடங்களை ஒதுக்க வேண்டும் என பாஜக தரப்பு வலியுறுத்தி வருகிறது.
கூட்டணி பேச்சுவார்த்தை
மீதமுள்ள 134 தொகுதிகளில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற இந்த முன்மொழிவு, எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் காலத்தில் தமிழகம் வரவுள்ளதாக கூறப்படும் தகவல்களும், கூட்டணி அறிவிப்பு வேகமெடுக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications