Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தப்புங்க.. எடப்பாடி கோட்டையில் கல்லெறிந்த வையாபுரி.. ஆடிப்போன சேலம் அதிமுக.. பின்னணியில் "தோஸ்து"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக சேலத்திலேயே அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க தொடங்கி உள்ளனர். இவரின் நியமனம் தவறானது என்று விமர்சனம் வைக்க தொடங்கி உள்ளனர்.

அதிமுக உட்கட்சி தேர்தல் முடிந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று 41 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் சேலம் புறநகர் மாவட்டத்தில் அதிமுக சார்பாக இளங்கோவன் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இவர் மிகவும் நெருக்கமானவர்.

இளங்கோவன் நெருக்கம்

இளங்கோவன் நெருக்கம்

கோடநாடு வழக்கு விசாரணை வளையத்தில் இவர் இருக்கிறார். அதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறையும் கூட்டுறவு வங்கி சங்கத் தலைவரான இவரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் ரெய்டு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இளங்கோவன் தற்போது சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இளங்கோவன் நியமனத்திற்கு கட்சிக்கு உள்ளேயே கடும் எதிர்ப்புகள் எழ தொடங்கி உள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

ஆதரவு

ஆதரவு

கேசில் இருக்கும் ஒருவருக்கு ஆதரவு தருகிறார்கள் என்று ஒரு பக்கம் இவரின் நியமனத்தை சிலர் பாராட்டி வருகிறார்கள். அதே சமயம் இளங்கோவனை விட கட்சியில் சீனியர்கள் இருக்கிறார்கள். கட்சிக்காக பணிகளை செய்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பதவிகளை கொடுக்காமல் இவருக்கு கொடுத்துள்ளனர் என்று இந்த நியமனத்திற்கு எதிராகவும் பலர் குரல் கொடுத்துள்ளனர். இவர் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கம்.

பலர் எதிர்ப்பு

பலர் எதிர்ப்பு

அதனால் இந்த பதவி கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் எடப்பாடியே இந்த பதவியில் நீடித்து இருக்கலாம். அவர் நீடித்து இருந்தால் நிர்வாகிகளுக்கு சுதந்திரம் இருக்கும். தேர்தல் நேரத்திலும் நன்றாக பணியாற்றலாம். ஆனால் இளங்கோவன் கீழ் அப்படி பணியாற்றுவது சந்தேகம்தான் என்று அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாக அதிருப்தியை வெளிக்காட்டி வருகிறார்கள். அதிமுகவில் விரைவில் 2 ராஜ்ய சபா எம்பிக்கள் தேர்வாக உள்ளனர்.

எம்பி பிளான்

எம்பி பிளான்

அந்த பதவிக்கு இளங்கோவன் குறி வைத்து, அது கிடைக்காது என்றநிலையில் மா. செ பதவியை பெற்றுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் இளங்கோவன் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றியச்செயலாளர் வையாபுரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சேலம் ஒன்றியச்செயலாளர் வையாபுரி.. மாவட்ட செயலாளராக இளங்கோவன் இருக்கும் வரை நான் இந்த பதவியில் இருக்க மாட்டேன் என்று கூறி உள்ளார்.

சேலத்தில் கொதிப்பு

சேலத்தில் கொதிப்பு

அதோடு இளங்கோவன் நியமனத்திற்கு எதிராக பல்வேறு ஊடகங்களில் இவர் கடுமையான பேட்டியும் அளித்து உள்ளார். இவர் மட்டுமின்றி, இன்னும் சில சேலம் நிர்வாகிகள், இளங்கோவன் கட்சியில் மா. செ பொறுப்பில் இருந்தால் மற்றவர்கள் முன்னேற முடியாது. அதிமுகவிற்குத்தான் சிக்கல் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆனால் இளங்கோவனுக்கு நெருக்கமானவர்களோ.. பொதுவாக தேர்தல் வேலைகளை இளங்கோவன்தான் சிறப்பாக செய்வார்.

ஆட்டம் காணும் கோட்டை

ஆட்டம் காணும் கோட்டை

சட்டசபை தேர்தலில் சேலத்தில் அதிமுக நன்றாக செயல்பட இளங்கோவனும் காரணம். அதனால் இப்போது பதவி கொடுத்துள்ளனர். இதில் என்ன தவறு இருக்க முடியும். அவரை எடப்பாடி முழுமையாக நம்புகிறார். அவருக்கு இவர் நெருங்கிய நண்பர். அதனால் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதை சிலர் தேவையின்றி எதிர்க்கிறார்கள் என்று இளங்கோவனுக்கு நெருக்கமான வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+