அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் தேர்தல் முடிந்த பிறகு அதிகமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று, அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி அடுத்தடுத்து நிர்வாகிகள் தாவி வருவது தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியல் அனுபவம் இல்லாத கட்சியாக பார்க்கப்பட்ட தவெக, இன்று எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பிரச்சாரத்தில் எம்ஜிஆரை விஜய் பயன்படுத்தியபோதே அதிமுக உஷாராகி இருக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்

பொதுவாக ஒரு புதிய கட்சி உருவாகும்போது அதில் சேர்வது புதிய முகங்கள், இளைஞர்கள் அல்லது அரசியலில் வாய்ப்பு கிடைக்காதவர்களாக இருப்பார்கள். ஆனால் தற்போது நிலைமை கொஞ்சம் மாறி வருகிறது. நீண்ட காலமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தவெகவை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர்.

AIADMK Cadres Shift To TVK Triggers Fresh Political Debate

இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்து வரும் சவால்கள்தான். ஒருகாலத்தில் ஜெயலலிதாவின் முழுமையான கட்டுப்பாட்டில் செயல்பட்ட கட்சி, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உட்கட்சி பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

அதிமுக

தலைமை குறித்த விவாதங்கள், நிர்வாகிகளுக்கிடையேயான போட்டி, கட்சியின் எதிர்காலம் குறித்த குழப்பம் போன்றவை சில நிர்வாகிகளிடம் அதிருப்தியை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அதிமுகவின் இந்த சூழ்நிலையை தவெக சரியாக பயன்படுத்திக் கொள்கிறது என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது. கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து மாற்று அரசியலை முன்வைத்து பேசுவது, இளைஞர்களை கவரும் வகையில் செயல்படுவது மற்றும் எதிர்கால அரசியல் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்துவது போன்ற காரணங்களால் சில நிர்வாகிகள் அக்கட்சியை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.

அதிமுக நிர்வாகிகள்

ஆனால் இதை வைத்து அதிமுக பலவீனமடைந்துவிட்டது என்று கூறிவிட முடியாது என அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழகத்தில் இன்னும் வலுவான அடித்தள அமைப்பையும், கணிசமான வாக்கு வங்கியையும் கொண்ட கட்சியாக அதிமுக உள்ளது. தேர்தலில் தோல்வி ஏற்பட்டாலோ அல்லது சில நிர்வாகிகள் விலகினாலோ, அந்த கட்சியின் பலம் உடனடியாக குறைந்து விடாது என்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது.

தவெக

மறுபுறம் தவெகவுக்கும் இது ஒரு சவாலான காலகட்டமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு கட்சியில் இருந்து வந்தவர்களை இணைத்துக் கொள்வது எளிது. ஆனால் அவர்களை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்வதும், ஒரே அரசியல் நோக்கத்தில் செயல்பட வைப்பதும் மிகவும் கடினமான வேலை. குறிப்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, பதவி, தொகுதி ஒதுக்கீடு போன்ற விஷயங்கள் வரும்போது பல்வேறு கருத்து வேறுபாடுகள் உருவாகும் வாய்ப்பு இருக்கும்.

தேர்தல் அரசியல்

அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், தமிழகத்தில் பல கட்சிகள் இதுபோன்ற வளர்ச்சியை ஒரு கட்டத்தில் சந்தித்துள்ளன. மற்ற கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வந்ததால் சில கட்சிகள் வேகமாக வளர்ந்தன. அதே நேரத்தில், அந்த வளர்ச்சியை நிலைநிறுத்த முடியாமல் பின்னடைவை சந்தித்த நிகழ்வுகளும் உள்ளன. அதனால் தற்போது நடைபெற்று வரும் இந்த அரசியல் இடமாற்றங்களை வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் பார்க்க முடியாது.

தமிழக அரசியல்

இது எதிர்காலத்தில் வாக்குகளாக மாறுமா? புதிய ஆதரவாளர்களை தவெக நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளுமா? அதிமுக தனது கட்சி கட்டமைப்பை மீண்டும் பலப்படுத்துமா? என்பதுதான் முக்கியமான கேள்வியாக உள்ளது. வரும் மாதங்களில் இந்த கேள்விகளுக்கான பதில்கள் படிப்படியாக தெரிய வரும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி. அதிமுக மற்றும் தவெக இடையே உருவாகியுள்ள இந்த போட்டி, 2026 தேர்தலுக்கு பிறகும் தமிழக அரசியலில் தொடர்ந்து பேசப்படும் முக்கிய விவகாரங்களில் ஒன்றாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+