Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

#Exclusive அதிமுக ‘குடுமி’ ராமதாஸ் கையில்.. பாமக எந்தப் பக்கம்? போட்டு உடைக்கும் முக்கிய புள்ளி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக இல்லாமல் லோக்சபா தேர்தலை சந்திக்க முடியாது என்ற சூழலுக்கு அதிமுக வந்திருப்பதாக கூறுகிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. நமது ஒன் இந்தியா தமிழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி இங்கே!

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக, கிட்டத்தட்ட கூட்டணி கதவுகளை மூடிவிட்டது. தொகுதி பங்கீடு மட்டும் தான் பாக்கி. அதிமுக, பாஜகவை பொறுத்தவரை, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை இழுக்க தீவிரம் காட்டி வருகின்றன. வட தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி கொண்ட பாமகவை இழுப்பதில் அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இப்படியான சூழலில், பாமகவின் எண்ண ஓட்டங்களை அலசுகிறார் ரவீந்திரன் துரைசாமி.

 AIADMK came to the tough situation that it cannot face election without ally with pmk

கேள்வி: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாமக, எந்தக் கூட்டணிக்குச் செல்வது அவர்களுக்குச் சாதகம்?

ரவீந்திரன் துரைசாமி: பாமக 2004 வரை வெற்றிக் கூட்டணியில் இடம்பெறும் கட்சியாக இருந்தது. அது 2009 உடன் முடிந்துவிட்டது. இப்போது, இரண்டாவது இடத்தை முடிவு செய்யும் கட்சியாக பாமக உள்ளது. வட தமிழ்நாட்டில் உள்ள 20 தொகுதிகளில் இரண்டாவது இடம் வர வேண்டும் என்றால், பாமக கூட்டணியில் இல்லாமல் முடியாது.

திமுக கதவைத் தட்டி கூட்டணி வாய்ப்பு கிடைக்காதா என துரைமுருகன் மூலமாக லாபி செய்து, 10.5% இட ஒதுக்கீட்டை ஒரு சாக்காக வைத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கூட்டணிக்கு முயற்சி செய்த ராமதாஸ், தேர்தலையொட்டி நட்பை உருவாக்க முயன்றார். பெரியாரும், அம்பேத்கரும் போல என திமுக - விசிக எனப் பேசி அதற்கு ஸ்டாலின் முற்றுப் புள்ளி வைத்துவிட்டார். பாமக முயற்சி தோல்வியடைந்து, திமுக கூட்டணி கிடைக்காமல் இலவு காத்த கிளியாக பாமக நிற்கிறது.

அப்படி இருக்கும் பாமகவின், கதவைத் தட்டி காத்துக் கிடக்கிறது அதிமுக. பாமக பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்டால், வடதமிழகத்தில் 20 தொகுதிகளில் இரண்டாமிடம் நம் கையை விட்டுப் போய்விடும் என பயந்து தான் அதிமுக தவியாய்த் தவிக்கிறது.

பாமக செல்வாக்கான கட்சி என்பதை மறுப்பதற்கு இல்லை. தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் நிற்க முடியாத இடத்தில் எப்போதும் வலுவாக இருக்கிறது பாமக. 2009ல் விஜயகாந்த் உடன் கூட்டணி சேராமல், அதிமுகவுக்கு இரண்டாவது இடத்தை உறுதி செய்து கொடுத்தது பாமக. பல இடங்களில் அதிமுக வெற்றி பெறவும் காரணமாக இருந்தது.

2019ல் 7 லோக்சபா ஒரு ராஜ்யசபா என சீட் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் பாமக ஓட்டு அதிமுகவுக்கு கிடைக்கவில்லை. தருமபுரியில் அதிமுக ஓட்டு பாமகவுக்கு கிடைக்கவில்லை. பொருந்தாக் கூட்டணியாக அமைந்தது. இப்போது இந்தத் தேர்தலிலும் பேரத்தில் உறுதியாக இருக்கிறார்கள். அதிக சீட் வாங்கி நின்றால் தான் நிலைத்து நிற்க முடியும் என கருதுகிறார் ராமதாஸ்.

பாஜக உடன் கூட்டணியை விட்டு பிரிந்துள்ள எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை விட்டு வர தயாரில்லாத நிலையில், தனித்துப் போட்டியிட முடியாமல் பாமகவை முழுக்க முழுக்க நம்பி இருக்கிறார். சீட் பேரத்தில் ராமதாஸ் சோடைபோகும் ஆள் அல்ல. சூராதி சூரனிடத்திலும் சீட் பேரத்தில் ராமதாஸ் தோற்றதில்லை.

அதேசமயம், அன்புமணி ராமதாஸ், தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற இமேஜ் போய்விடக் கூடாது என நினைக்கிறார். அந்த இமேஜ் போனால், தேமுதிக, மதிமுக, தமாகா போல பலகீனமடையும். எது எப்படியோ, இந்த அரசியலில் 2வது இடத்தை முடிவு செய்யக் கூடிய இடத்தில் தமிழ்நாட்டில் பாமக இருக்கிறது. சாதக பாதகங்களை வைத்து ராமதாஸ், கூட்டணியையும், சீட் எண்ணிக்கையையும் முடிவு செய்வார்.

அன்புமணி ராமதாஸ், பாஜக கூட்டணியையே விரும்புவது போல் தெரிகிறது. அதிமுக கூட்டணி உறுதி செய்யப்படவில்லை எனக் கூறுகிறார். மத்திய அமைச்சர் ஆகும் அவரது எண்ணம் பலிக்கக்கூடும். மோடி பிரதமர் என வலியுறுத்துவதால், தான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற பெயரும் நிலைத்து நிற்கும். பாமக, பாஜகவிடம் சில நிபந்தனைகளை முன்வைக்கலாம். ஏற்கனவே 2014ல் மாற்றுக் கூட்டணியில் தருமபுரியில் அன்புமணி வென்றார். அந்தவகையில், பிளஸ்களை எண்ணிப் பார்த்து பாஜக அணியில் பாமக நிற்கக்கூடும்.

பாமகவின் வாக்கு வங்கியில் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. தனித்துப் போட்டி, இட ஒதுக்கீடு ஆகியவற்றை விட்டுக்கொடுத்தால், அவரது சமூக வாக்குகள் எந்தப் பக்கம் போகும் எனச் சொல்லமுடியாது. 10+1 சீட்கள் வாங்கிவிட்டால் ஆபத்தில் இருந்து தப்பிவிடுவார் ராமதாஸ். திண்டுக்கல், மத்திய சென்னை எல்லாம் வாங்கக்கூடாது, வட தமிழகத்தில் சமூக பெல்ட்டில் 10 தொகுதிகளை பாமக பெற்றால், பாமக தப்பிக்கும். இவ்வாறு கூறியுள்ளார் ரவீந்திரன் துரைசாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+