2000 நோட்டு.. ஆர்கே நகர் பாணி டோக்கன் சிஸ்டம்.. செந்தில்பாலாஜி மீது செந்தில் நாதன் பகீர்
கரூர்: ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டை கொடுத்து திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மக்களை ஏமாற்றுவதாக அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் இன்று அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் உள்ளிட்ட நான்கு தொகுதிகளின் இடைத்தேர்தல் நடந்து வருகிறது.

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன், வாக்குப்பதிவு நடந்து வரும் பள்ளப்பட்டி வாக்குச்சாவடியை இன்று பார்வையிட்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "வாக்குப்பதிவு எல்லா இடங்களிலும் சிறப்பாக நடந்த வருகிறது. திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கிறார். மேலும் வாக்களிக்க வரும் மக்களிடம் வாக்களித்து விட்டு வாருங்கள், உங்களுக்கு ரூ.2 ஆயிரம் தருகிறேன் என்று சொல்கிறார். தொடர்ந்து மக்களை ஏமாற்றுவதில் குறிக்கோளாக இருக்கிறார் எதிர்க்கட்சி வேட்பாளர் செந்தில் பாலாஜி.
வாக்களிக்க வரும் மக்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டை செந்தில் பாலாஜி தரப்பினர் கொடுத்திருக்கிறார்கள். போலீசார் இதனை கார்குலி ஊராட்சியில் இப்போது பிடித்திருக்கிறார்கள். ஆர்கே நகர் போல் டோக்கன் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மக்கள் எல்லாம் பதற்றமாக இருக்கிறார்கள். நிம்மதியாக ஓட்டு போடவிடாமல் செய்துவிட்டார் செந்தில் பாலாஜி, அவர் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளோம்" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications