Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்-க்கு சாதகமான 2 பாயிண்ட்கள்.. நீதிபதி சுட்டிகாட்டிய விதிமீறல்.. நாளை தான் சம்பவமே இருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக குறித்த வழக்கின் முழு தீர்ப்பில் ஓபிஎஸ்-க்கு சாதகமான 2 பாய்ண்ட்களை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் நீக்கப்பட்ட விவகாரத்தில் விதிமீறலை நீதிபதி சுட்டிக்காட்டி இருந்தார். எனவே நாளை நடைபெற உள்ள மேல்முறையீட்டு வழக்கில் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கியது, பொது செயலாளர் பதவி உருவாக்கம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு உத்தரவிட்டிருந்தார்.

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி, அவர்கள் மூவருடன் சேர்ந்து ஒ.பன்னீர்செல்வமும் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்த காரணமும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது தன்னிச்சையானது, நியாயமற்றது என்றும், பெரும்பான்மை உள்ளதால் எந்த முடிவும் எடுக்க முடியும் என வாதிடப்பட்டது. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் அனைவருமே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்டவர்கள் தான் என்றும், தங்களை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம் தொடர்பாக ஜூலை 11 பொது குழுவில் எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லாத நிலையில், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ஆனால் இந்த சிறப்பு தீர்மானத்தின் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. பொது செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி பெறுவதற்காக முக்கிய பதவி வகித்த தன்னை திட்டமிட்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, பொது செயலாளர் தேர்தல் நடத்தி ஒற்றை தலைமையை உருவாக்கும் நோக்கம் மட்டுமல்ல என்றும், போட்டியே இல்லாமல் அந்த பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் தரப்பில் குற்றம்சாட்டபட்டது.

கட்சி அலுவலகம்

கட்சி அலுவலகம்

அதற்கு அதிமுக தரப்பில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதும், கட்சி அலுவலகத்தை சூறையாடியதுமே, ஜூலை 11 பொதுக்குழுவில் அவர்களை நீக்க தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்ததாகவும், கட்சியினரின் குரலாக பொது செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஓ ராசா நீக்கம்

ஓ ராசா நீக்கம்

பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர, பதவிகள் காலாவதி என அறிவிக்கவில்லை என்றும், கட்சியில் எந்த ஆதரவும் இல்லாதவர்கள் போட்டியிடுவதை தடுக்கவே பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தகுதி நிபந்தனைகள் கொண்டு வரப்பட்டன என்றும் வாதிடப்பட்டது. ஒ.பி.எஸ். ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, அவரது சகோதரர் ராஜா, கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோரை நீக்கும் முன் எந்த நோட்டீசும் கொடுக்கவில்லை, கட்சியை விட்டு நீக்க ஒரே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஓபிஎஸ் மனுக்கள் தள்ளுபடி

ஓபிஎஸ் மனுக்கள் தள்ளுபடி

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பை கடந்த மார்ச் 22ம் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கே.குமரேஷ்பாபு, பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் புதிய பொதுச்செயலாளருக்கான தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஏற்க முடியாது

ஏற்க முடியாது

அப்போது நீதிபதி கே.குமரேஷ்பாபு அளித்த தீர்ப்பின் சாரம்சங்களை பார்ப்போம்.. "கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ள போதும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறாக திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும், எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால் தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை பன்னீர்செல்வம் தரப்பினர் முன் வைத்த வாதங்களை ஏற்க முடியாது.

தீர்மானங்கள் செல்லும்

தீர்மானங்கள் செல்லும்

ஏனென்றால் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2 ஆயிரத்து 460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே. பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்கால பொதுச்செயலாளர் நியமித்த தீர்மானங்களும் செல்லும்

கட்சி முடங்கும்

கட்சி முடங்கும்

பன்னீர்செல்வம் தரப்பினரின் வாதங்களை ஏற்று தீர்மானங்களுக்கு தடை விதித்தால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியை நிர்வகிக்க வேண்டி வரும். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் கட்சி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்படும்

நோட்டீஸ்

நோட்டீஸ்

பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை, அதை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும். தற்போதைய நிலையில் ஏழு நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும், சிறப்பு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதித்தால் அது கோடியே 55 லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்க முடியாது.

நிராகரிக்கப்படுகிறது

நிராகரிக்கப்படுகிறது

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால், கட்சியை வழி நடத்த தலைவர் இல்லாமல் கட்சி பெரிதும் பாதிக்கப்படும். தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதித்தால் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாட்டையும் பாதிக்கும். அதனால் தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றன என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

ஓபிஎஸ்க்கு சாதகம்

ஓபிஎஸ்க்கு சாதகம்

இதனிடையே உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உடனே ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதியே தற்போதைய நிலையில் ஏழு நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது என்பதை தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளார். அதேபோல் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை, அதை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும் என்று நீதிபதி கூறியுள்ளார். எனவே இந்த வழக்கில் நாளை நடக்க உள்ள மேல்முறையீட்டுக்கு இந்த இரண்டு பாயிண்ட்டுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+