சென்னை: அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் களம் இப்போதே பரபரப்பாக உள்ளது.
இந்த தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தம்மை அறிவிக்க வேண்டும் என்பது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை. ஆனால் முதல்வர் வேட்பாளராக தாமே இருக்க வேண்டும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிலை.
முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக அதிமுகவில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்றன. இந்த நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Oct 07, 2020, 6:02 pm IST
முதல்வர் வேட்பாளராக தன்னை தேர்வு செய்து இருப்பதற்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளார் ஈபிஎஸ்
Oct 07, 2020, 6:00 pm IST
ஓபிஎஸ் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இருக்கும் 11 பேரும் வருகை.
முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து ஓபிஎஸ் வரவேற்பு.
Oct 07, 2020, 4:33 pm IST
தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வேன்: எடப்பாடி பழனிசாமி
தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன். #AIADMKFOR2021
அதிமுக முதல்வர் வேட்பாளராக வாய்ப்பு அளித்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி
புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/2dR9cjLDNC
அதிமுகவில் 10 நாட்களாக நீடித்த உச்சகட்ட உட்கட்சி குழப்பம் முடிவுக்கு வந்தது
Oct 07, 2020, 10:08 am IST
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த தலைவர்கள் வாழ்த்து
Oct 07, 2020, 10:04 am IST
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி- அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முதல்வர் வேட்பாளரை துணை முதல்வர் ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Oct 07, 2020, 10:03 am IST
அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு
Oct 07, 2020, 10:03 am IST
தொண்டர்களை முன்னிறுத்தி கட்சி- ஆட்சியை சிறப்பாக செயலாற்றி வருகிறோம்: ஓபிஎஸ்
Oct 07, 2020, 9:59 am IST
முதல்வர் வேட்பாளரை அறிவித்து கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்
Oct 07, 2020, 9:57 am IST
அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர்கள்: சோழவந்தான் மாணிக்கம்
Oct 07, 2020, 9:57 am IST
அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர்கள்: ஜேசிடி பிரபாகரன், மனோஜ்பாண்டியன், ப. மோகன், கோபாலகிருஷ்ணன்
Oct 07, 2020, 9:56 am IST
அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர்கள்: ஜெயக்குமார், சிவி சண்முகம், காமராஜ்
Oct 07, 2020, 9:55 am IST
வழிகாட்டு குழு உறுப்பினர்கள்: திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி
Oct 07, 2020, 9:55 am IST
11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டும் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
அதிமுக வழிகாட்டும் குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
Oct 07, 2020, 9:52 am IST
ஓபிஎஸ் தலைமையிலான 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார்
Oct 07, 2020, 9:51 am IST
முதல்வர் வேட்பாளரை அறிவிக்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்
Oct 07, 2020, 9:49 am IST
ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது
Oct 07, 2020, 9:46 am IST
இன்னும் சில நிமிடங்களில் அதிமுகவின் க்ளைமாக்ஸ்- முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகிறது
Oct 07, 2020, 9:42 am IST
அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட உள்ளார் என தகவல்
Oct 07, 2020, 9:40 am IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்ஸை விட ஈபிஎஸ்-க்கு தொண்டர்கள் அமோக வரவேற்பு
Oct 07, 2020, 9:40 am IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு
Oct 07, 2020, 9:39 am IST
அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்
READ MORE
6:08 AM, 7 Oct
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? இன்று அறிவிப்பு வெளியாகிறது
6:08 AM, 7 Oct
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டாக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கின்றனர்
6:08 AM, 7 Oct
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில மாதங்களாக நீடித்து வருகிறது
6:08 AM, 7 Oct
அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை பெரிதாக வெடித்த நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகிறது
6:08 AM, 7 Oct
அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது
6:08 AM, 7 Oct
அதிமுகவின் பொதுச்செயலாளராக ஓபிஎஸ், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி என இருதரப்பும் சமாதானம் அடைந்திருப்பதாக தகவல்
6:09 AM, 7 Oct
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படாவிட்டால் முதலில் வழிகாட்டும் குழு ஒன்றை அறிவிக்கவும் வாய்ப்பு
6:09 AM, 7 Oct
அதிமுகவின் வழிகாட்டும் குழுவின் கூடி முதல்வர் வேட்பாளர், பொதுச்செயலாளர் குறித்து முடிவெடுத்து அறிவிக்கும்
6:09 AM, 7 Oct
முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக சென்னையிலும் தேனியிலும் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்
6:09 AM, 7 Oct
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே இருக்க வேண்டும் என அமைச்சர்களில் பெரும்பாலானோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்
6:09 AM, 7 Oct
ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையே சமாதானம் ஏற்படுத்த அமைச்சர்கள், அதிமுக மூத்த தலைவர்கள் இடைவிடாது முயற்சிகளை மேற்கொண்டனர்
6:09 AM, 7 Oct
அதிமுகவின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஓபிஎஸ் ட்விட்டரில் பகவத் கீதையை மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தது சர்ச்சையானது
6:09 AM, 7 Oct
பெரியகுளத்தில் தலைவா வா! தலைமை ஏற்கவா! என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டியதும் சர்ச்சையானது
6:10 AM, 7 Oct
தேனியில் நாளைய முதல்வரே என ஓபிஎஸ்-க்கு ஆதரவாக 100 அடி நீள பேனர்களை பிடித்து வரவேற்பு கொடுத்திருந்தனர் ஆதரவாளர்கள்
6:10 AM, 7 Oct
அதிமுக பொதுக்குழுவில் தமக்கே ஆதரவு இருக்கிறது என்பதால் அனைத்தையும் பொதுக்குழுவிலேயே பார்த்து கொள்வோம் என செயற்குழுவிலும் அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டங்களிலும் ஈபிஎஸ் கூறியிருந்தார்
6:10 AM, 7 Oct
வழிகாட்டும் குழுவில் அமைச்சர்கள் இருக்கக் கூடாது என்பது ஓபிஎஸ் நிபந்தனை
6:10 AM, 7 Oct
வழிகாட்டும் குழுவில் 6 அமைச்சர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பது ஈபிஎஸ் நிபந்தனை
6:30 AM, 7 Oct
அதிமுக முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய நள்ளிரவை தாண்டியும் ஆலோசனை நடத்தினர்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் விடிய விடிய பல மணிநேரங்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவை தாண்டியும் அதிகாலை 3.30 மணிவரை ஆலோசனை நடைபெற்றது.
6:31 AM, 7 Oct
முதல்வர் வேட்பாளரை அறிவிக்க துணை முதல்வர் ஓபிஎஸ் நிபந்தனை விதித்திருப்பதாக தகவல்.
வழிகாட்டுதல் குழு அமைத்தால் மட்டுமே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும்.
வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறுபவர்களின் பெயர்களை அறிவிப்பதும் அவசியம் என ஓபிஎஸ் திட்டவட்டம்.
6:32 AM, 7 Oct
அதிகாரம் மிக்க 11 பேர் கொண்ட குழுவை அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் திட்டவட்டம்.
வழிகாட்டுதல் குழு இல்லாவிட்டால் தனக்கு முழு அதிகாரம் வேண்டும் என்று தகவல்.
இன்று காலை 10 மணிக்கு முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்.
ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்தியுள்ளனர்.
6:32 AM, 7 Oct
பத்துமணிக்கு நல்ல செய்தி கிடைக்கும் என வைத்திலிங்கம் தகவல்.
எங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்கான முயற்சி செய்து வருவதாக கூறினார் வைத்திலிங்கம்.
7:12 AM, 7 Oct
டெல்லி ஆதரவு எனக்குதான் என காட்டுகிறாரா? மோடியின் நன்றி கடிதத்தை ஓபிஎஸ் வெளியிட்டதால் புதிய சர்ச்சை
I'm extremely happy to receive a letter from hon'ble prime minister Shri. Narendra Modi @narendramodi ji acknowledging and accepting my birthday wishes. pic.twitter.com/I8QfzupCzj
முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகாமல் போனால் நடந்தது என்ன என்பது குறித்து ஓபிஎஸ் தனியாக அறிக்கை வெளியிட முடிவு
7:28 AM, 7 Oct
காலை 8.45 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் முதல்வர் ஈபிஎஸ்
7:54 AM, 7 Oct
அதிமுக முதல்வர் வேட்பாளர், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அறிவிப்பு காலை 9.45 மணிக்கு வெளியாகிறது?
7:54 AM, 7 Oct
முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு விவகாரம்- சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்
8:14 AM, 7 Oct
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு புலிவேஷம் கட்டி ஆட்டம் போடும் இபிஎஸ் ஆதரவாளர்கள்.
ராயப்பேட்டை சாலையின் இருபக்கமும் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
ராயப்பேட்டையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஓபிஎஸ், இபிஎஸ் வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
8:22 AM, 7 Oct
அதிமுக முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு 9.30 மணிக்கு வெளியாகிறது.
காலை 9.30 மணியில் இருந்து 10 மணிக்குள் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும்.
8:37 AM, 7 Oct
முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் ஆலோசனை.
அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்.
முதல்வர் வீட்டில் மூன்றாம் கட்ட ஆலோசனை நடைபெறுகிறது.
அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.
8:39 AM, 7 Oct
தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் தனியாக ஆலோசனை நடத்துகிறார்.
ராயப்பேட்டை செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு.