“இடைத்தேர்தலில் தவெக பணம் பட்டுவாடா செய்றாங்க”.. தேர்தல் ஆணையத்தில் அதிமுக அவசர புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.

அதிமுக எம்.பி இன்பதுரை தலைமையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 2 தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக அவர்கள் புகாரில் குற்றம் சாட்டியுள்ளனர்.

by election aiadmk tvk

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் வருகிற அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொண்டு தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தவெக சார்பாக மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சத்யபாமா ஆகியோர் வாக்கு சேகரிப்புப் பிரச்சாரத்தின் போது மக்களிடையே கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர். அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அவர்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தற்போது தவெக சார்பில் போட்டியிடும் நிலையில் தொகுதிக்குள் அதிமுக தொண்டர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே மதுராந்தகம் தொகுதியின் ரெட்டிபாளையம் பகுதியில் தவெக கட்சியினர், தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களிடம் பணப்பட்டுவாடா செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இடைத்தேர்தல் நடக்கும் இரு தொகுதிகளில் பண பட்டுவாடா செய்வதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அதிமுக எம்.பி இன்பதுரை, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கொடுத்துள்ள புகாரில், 'மதுராந்தகம் தொகுதிகு உட்பட்ட அச்சரப்பாக்கம், ரெட்டிப்பாளையம் மற்றும் தாராபுரம் பகுதிகளில் வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாகப் பணம் விநியோகிக்கப்படுகிறது. இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 123(1) (லஞ்சம்) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) விதிகளின்படி கடுமையான குற்றமாகும்.

எனவே பறக்கும் படைகள் மூலம் இரு தொகுதிகளிலும் உடனடியாகத் தீவிர கள ஆய்வு நடத்த வேண்டும். சிசிடிவி, தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக வீடியோ ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் பிரச்சார செலவுகளையும், வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறலில் ஈடுபட்டோர் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, சோதனைச் சாவடி கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+