திமுகவா? அதிமுகவா? சட்டசபையில் மாறி மாறி விவாதம்.. அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 7.5% இட ஒதுக்கீட்டை தாங்கள்தான் கொண்டு வந்ததாகக் கூறி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். 7.5% இட ஒதுக்கீடுக்காக ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் நடத்தி வலியுறுத்தியது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

AIADMK Creates Ruckus In assembly Over 7 5 Quota Minister Ma Subramanian Responds

சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், இன்று முதல் சட்டமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கேள்விக்கான விடைகள் அளிக்கப்பட்டது.

இன்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், 7.5% இட ஒதுக்கீடுக்காக ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம் நடத்தி வலியுறுத்தியது எனத் தெரிவித்தார். இதையடுத்து 7.5% இட ஒதுக்கீட்டை தாங்கள்தான் கொண்டு வந்ததாகக் கூறி தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+