30 தொகுதிகளில் இரட்டை இலை.. எடப்பாடி டிக் அடித்த கூட்டணி லிஸ்ட்! உள்ளே வந்த சரத்குமார், கிருஷ்ணசாமி!
சென்னை: லோக்சபா தேர்தலில் 30 தொகுதிகளில் 'இரட்டை இலை’ சின்னத்தில் களமிறங்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான கூட்டணியை முடிவு செய்வது குறித்தும், கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும் பணிகளிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக கூட்டணி: திமுக கிட்டத்தட்ட தங்கள் கூட்டணியை இறுதி செய்துவிட்டது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள 4 கட்சிகளுக்கு தொகுதிகளையும் ஒதுக்கிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மநீம உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை நீடிக்கிறது. விரைவில் இந்தக் கட்சிகளுக்கும் சீட்கள் ஒதுக்கப்பட்டு, தொகுதி உடன்பாடு இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்: அதிமுக தரப்பில் இதுவரை எந்தக் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட சிறிய கட்சிகள் அதிமுக கூட்டணியை உறுதி செய்துள்ளன. தேமுதிக மற்றும் பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை இப்போது தீவிரப்படுத்தியுள்ளது அதிமுக. நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் 2 முறை சந்தித்துப் பேசியுள்ளார். இந்தக் கட்சிகளுடன் விரைவில் அதிமுக தொகுதி உடன்பாட்டை எட்டும் எனத் தெரிகிறது. இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று சந்தித்து மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறிய கட்சிகளுடன் உடன்பாடு: பாமக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் ஆகிய சிறிய கட்சிகளுடனும் அதிமுக சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணியில் போட்டியிடும் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களை இரட்டை இலை சின்னத்தில் களமிறக்க அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்க உள்ளதாக தெரிகிறது.
5 கட்சிகளுக்கு 5 சீட்: நெல்லை முபாரக்கின் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி, பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளூர் தொகுதி, ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு நெல்லை தொகுதி ஆகியவற்றை ஒதுக்கவும் அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாமக, தேமுதிகவுக்கு எத்தனை?: மேலும், பாமக மற்றும் தேமுதிக ஆகிய 2 கட்சிகளுக்கும் சேர்த்து 10 தொகுதிகள், அதாவது பாமகவுக்கு 6 - 7 தொகுதிகள், தேமுதிகவுக்கு 3 - 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
பாமக, தேமுதிக - மொத்தமாக 10 தொகுதிகள்
சிறிய கட்சிகள் மொத்தம் - 5 தொகுதிகள்
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போக, தமிழ்நாடு, புதுச்சேரியில் மீதமுள்ள 25 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளது. அதோடு, 5 சிறிய கட்சிகளின் வேட்பாளர்களையும் இரட்டை இலை சின்னத்தில் நிறுத்த அதிமுக முடிவெடுத்துள்ளதாம்.
30 தொகுதிகளில் இரட்டை இலை: இதன் மூலம், மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 30 இடங்களில் 'இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிட உள்ளது. மற்ற 10 இடங்களில் பாமக மாம்பழம் சின்னத்திலும், தேமுதிக முரசு சின்னத்திலும் போட்டியிட உள்ளன. விரைவில் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று, சீட் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ராயப்பேட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை!












Click it and Unblock the Notifications