கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை முதல் ஆளாக தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் செய்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. பல மாதங்களுக்கு முன்பே கூட்டணியை இறுதி செய்தது, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது, தேர்தல் வாக்குறுதிகள் அளித்தது என முன்னணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி சீட் ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான விவாதம் அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது. விஜய் கூட்டணிக்கு வருவார் என்று நம்பிக்கையில் தான் எடப்பாடி பழனிச்சாமி வெயிட்டிங் என்கின்றனர் விவரம் அறிந்த அதிமுகவினர்.
2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி மிக தீவிரமாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் தேர்தல் பணிகள்ல் அதிமுக தான் முன்னணியில் இருந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்த நிலையில் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது என அதிமுகவினரே சொல்லி வருகின்றனர். இதனை தவிடு பொடியாக்கும் வகையில் 2026 சட்டமன்ற தேர்தலில் வென்றாக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிச்சாமி
சொல்லப் போனால், கடந்த ஜூலை மாதத்திலேயே தேர்தல் பிரச்சாரத்தை தொகுதி வாரியாக தொடங்கினார். ஆளுங்கட்சிக்கு சவால் விடும் வகையில் அவர் தமிழகத்தின் பல பகுதிகளில் நேரடியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதுவரை அவர் சுமார் 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, தேர்தலை முன்னிட்டு மூன்று கட்டங்களாக மொத்தம் 16 தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்துள்ளார்.
முக ஸ்டாலின்
அவரின் இந்த வேகமான அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூட தனது பிரச்சார மேடைகளில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க தொடங்கியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வாறு தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிலை வகித்தாலும், தற்போது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பழனிசாமி எந்தத் தெளிவான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
என்.டி.ஏ கூட்டணி
தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ள நிலையில் கூட அவர் இதுவரை தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவை அறிவிக்காதது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால்தான் தொகுதி பங்கீடு அறிவிப்பில் தாமதம் ஏற்படுகிறது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
விஜய்க்காக அதிமுக
ஆனால் இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், "விஜய்க்காக அதிமுக தனது தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்காது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தொகுதி பங்கீட்டு விவரங்கள் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர். மேலும், கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏற்கனவே தங்களுக்கான தொகுதிகளை கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவுக்கு 25 தொகுதி
பாஜக 30 தொகுதிகள், பாட்டாளி மக்கள் கட்சி 22 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) 6 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பாஜகவுக்கு 25 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு எட்டு தொகுதிகள், தமாகாவுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. மேலும், அதிமுக 165-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக தொகுதி பங்கீடு
அதிமுக தரப்பில் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அறிக்கை உள்ளிட்ட அனைத்தும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதும், முறைப்படி அனைத்தும் அறிவிக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் டெல்லி பாஜக சில அழுத்தங்களை அதிமுகவுக்கு அழைத்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு வந்தால் 40 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியதாகவும், அதனால்தான் இன்னும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்யவில்லை என்றும் சொல்கின்றனர்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications