அதிமுகவின் டெல்லி முகம்.. லோக்சபா துணை சபாநாயகர்.. 6 முறை எம்.பி.. யார் இந்த தம்பிதுரை?
சென்னை: அதிமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தம்பிதுரை 6 முறை எம்பியாக இருந்துள்ளார். டெல்லியின் முகமாக பார்க்கப்படும் இந்த தம்பிதுரை லோக்சபா துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தம்பிதுரை. அதிமுகவில் தனது 18 வயதில் இணைந்த தம்பிதுரை அக்கட்சியின் டெல்லி முகமாக அறியப்படுகிறார். 1985 முதல் 1989 வரை நாடாளுமன்ற குழு துணைத் தலைவராகச் செயல்பட்டார்.

கரூர் தொகுதியில் போட்டியிட்டு
2009, 2014 தேர்தல்களில், அதிமுக கட்சியின் சார்பாக கரூரில் போட்டியிட்டு வென்றவர். அதிமுகவில் கொள்கைப் பரப்புச் செயலாளராகச் செயல்பட்டு வருகிறார். கரூர் தொகுதியில் இருந்து 4 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிதுரை, லோக்சபா துணை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் (சட்டம், கல்வி) என உயர்பதவிகளை வகித்தவர். எம்.ஜி.ஆர். காலத்தில் அரசியலில் இணைந்து, அதிமுகவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். 1998 -1999 வரை அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சட்டம், நீதி, கம்பெனி விவகாரங்கள் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
5 வது முறையாக தேர்வு
2019 லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் தம்பிதுரை. இதையடுத்து ராஜ்யசபா எம்பியாக அறிவிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் 5 வது முறையாக அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னொரு சீட்டினை கூட்டணி கட்சியில் உள்ள பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதிமுக பாஜக கூட்டணி
அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் ஒரு சீட் அதிமுகவுக்கு என்றும், இன்னொரு சீட் கூட்டணிக்கு எனவும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ராஜ்யசபா சீட் கேட்டிருந்த நிலையில் எடப்பாடி அன்புமணி பாமகவுக்கு வழங்க முன் வந்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் தான் பாமகவுக்கு மற்றொரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டு இருக்கிறது. பாமகவில் அன்புமணி ராமதாசே ராஜ்யசபா எம்பி வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications