அவ்வளவு எதிர்பார்த்தாரே அப்சரா.. கொளத்தூரில் ஆதிராஜாராமைக் களம் இறக்கிய அதிமுக.. செம ஷாக்!
சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் கொளத்தூரில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களில் ஒருவரான ஆதிராஜாராம் போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதிமுக சார்பில் அனைத்து கூட்டணிக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அதிமுக சார்பில் போட்டியிடும் 171 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாம் கட்ட பட்டியில் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜாராம் என்ற மாவட்டச் செயலாளர் போட்டியிடுகிறார். ஆதிராஜாராம் தற்போது தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளராகவும் அதிமுக அமைப்புச் செயலாளராகவும் உள்ளார்
ஆதிராஜாராம் ஏற்கனவே கடந்த 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஸ்டாலினுக்கு எதிராக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டவர். அந்த தேர்தலில் மு.க. ஸ்டாலினைவிட ஆதிராஜாராம் 2,468 வாக்குகள் மட்டுமே பெற்றார். எனவே, இந்த முறையில் ஸ்டாலினுக்குச் சவால் விடுக்கும் வகையில் அவரையே அதிமுக களமிறக்கியுள்ளது.
அதேநேரம் அதிமுக சார்பில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த அப்சரா ரெட்டிக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications