"ஸ்டிரிக்ட்".. அதிமுகவில் விரைவில் உட்கட்சி தேர்தல்.. மா.செக்கள் கூட்டத்தில் 6 தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று 6 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் சென்னையில் தொடங்கி நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்கள் உடன் இதில் ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் பேசுவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

தீர்மானம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் இறுதியில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 1 - மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாடு அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் இதய துடிப்பான காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு அரசு காத்திட வேண்டும்.

டீசல் விலை
தீர்மானம் 2 -- பெட்ரோல், டீசல் விலையை உடனே மத்திய அரசு குறைக்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறிய தமிழ்நாடு அரசு வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தீர்மானம் 3 - விலைவாசி உயர்வை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். ஆக்கபூர்வமான பொருளாதார கொள்கைகள் மூலம் விலைவாசியை

நெல் கொள்முதல்
தீர்மானம் 4- விவசாயிகள் விளைவித்த நெல்லை தாமதமின்றி கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை நெல்லை கொள்முதல் செய்யாததற்கு கடுமையான கண்டனங்களை அதிமுக தெரிவித்துக் கொள்கிறது. தீர்மானம் 5- சட்டசபை தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.

குடும்ப தலைவி
தீர்மானம் 6 - தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு வங்கி நகைக்கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை ரூ. 1500 ஆக உயர்த்துவது, கல்விக்கடன் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து அதிமுக கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நீக்கம்
அதோடு உட்கட்சி தேர்தல் நடத்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான முழு விவரங்கள் வெளியாகவில்லை. அதிமுகவில் இருந்து அரியலூர் முன்னாள் எம்.எல்.ஏ ப.இளவழகன், திருவள்ளூர் முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக இவர்கள் நீக்கப்பட்டனர்.

சசிகலா
அதிமுகவை சசிகலா கைப்பற்ற நினைப்பது குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் - இபிஎஸ் இரண்டு பேருமே மாவட்ட செயலாளர்களிடம் கண்டிப்புடன் பேசி உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் வருகிறது. எல்லோரும் கவனமாக பணியாற்ற வேண்டும்.

கவனம்
கட்சியை ஆக்கிரமிக்க நினைப்பவர்களுக்கு இடம் கொடுக்க கூடாது. தேர்தலை காரணம் காட்டி சிலர் கட்சிக்கு எதிராக செயல்படுவார்கள், கட்சிக்குள் நுழைய முயல்வார்கள். மாவட்ட செயலாளர்கள் இதை பற்றி கவலைப்படாமல் துடிப்புடன் செயல்பட வேண்டும், என்று கூறியுள்ளனர்.

முக்கியம்
முக்கியமாக அதிமுக - பாஜக கூட்டணியில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள், முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது திமுக தலைமையிலான் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசனை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications