Breaking News Live: திமுக கூட்டணியில்.. ஐயூஎம்எல் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு Chennai
oi-Veerakumar
Updated: Friday, February 22, 2019, 20:07 [IST]
சென்னை: தமிழக அரசியல் களம் தினம், தினம் சூடாகி வருகிறது. அதிமுக பாமக கூட்டணி, பிறகு பாஜகவோடு அதிமுக கூட்டணிகளால் அனல் பறந்த களம், அடுத்த நாளே திமுக-காங்கிரஸ் கூட்டணி அறிவிப்பால் இன்னும் சூடானது.
இப்போது தேமுதிக எந்த பக்கம் செல்லப்போகிறது என்ற பேச்சுதான் அரசியல் களத்தில் எங்கு பார்த்தாலும் எதிர்பார்க்கிறது.
இன்றைய அரசியல் நிலவரம், பேட்டிகள், நிகழ்வுகள் என உடனுக்குடன் அனைத்தையும், அறிய இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்:
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்- முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் இடையே உடன்பாடு
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சொந்தமான தைலாபுரம் வீட்டில் விருந்து
அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு விருந்து வைக்கிறார்
ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது - டிடிவி தினகரன்
பாமகவுக்கு எந்த நிலைப்பாடோ, அதே நிலைப்பாடு தேமுதிகவுக்கும் தான்
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் அமமுக போட்டி - டிடிவி தினகரன்
சேலத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
திமுகவுடன் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் பேச்சு
மதுரையில் பாஜக மேலிடப் பொறுப்பாளரை சந்திக்கவில்லை - ஜி.கே.வாசன் மறுப்பு
ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் - ஜி.கே.வாசன்
தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது - ஓ.பன்னீர் செல்வம்
ஓரிரு நாளில் கூட்டணி அமையும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
மதுரையில் அமித்ஷாவை சந்தித்த பின் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
மதுரையில் அமித்ஷாவுடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 2வது முறையாக மீண்டும் சந்திப்பு
அமைச்சர்கள், வேலுமணி, தங்கமணியும் அமித்ஷாவுடன் சந்திப்பு
விஜயகாந்த்தை சந்திக்க கமல்ஹாசனும் வருவதாக தகவல்
ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ள நிலையில் கமலும் வருகிறார்
மதுரையில் அதிமுக, பாஜக நிர்வாகிகளுடன் ஜி.கே வாசன் சந்திப்பு
ஓ.பன்னீர்செல்வம், முரளிதரராவுடன் ஜி.கே வாசன் சந்திப்பு
அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனை
விஜயகாந்த் உடல் நலம் தேறி வந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
விஜயகாந்த்திடம் நலம் விசாரித்தேன் - ஸ்டாலின்
மரியாதையுடன் அண்ணன் என்று அழைக்கக் கூடியவர் விஜயகாந்த் -ஸ்டாலின்
கருணாநிதி மீது பக்தி கொண்டவர் விஜயகாந்த் - ஸ்டாலின்
கருணாநிதி மறைந்தபோது வெளிநாட்டில் இருந்தார் விஜயகாந்த் - ஸ்டாலின்
தாங்க முடியாமல் அவர் அழுத காட்சி இன்றைக்கும் மறக்க முடியாது - ஸ்டாலின்
நாடு திரும்பியதும் நேரடியாக கலைஞர் நினைவிடம் சென்று அழுத காட்சி மறக்க முடியாதது - ஸ்டாலின்
இன்னும் ஆரோக்கியமாக அவர் திகழ வேண்டும் என்று அவரிடம் தெரிவித்துக் கொண்டேன்- ஸ்டாலின்
உடல் நலம் குறித்து பேச மட்டுமே வந்தேன் - ஸ்டாலின்
இது அரசியல் தொடர்பான சந்திப்பு அல்ல - ஸ்டாலின்
விஜயகாந்த் சந்திப்புக்குப் பின் மு.க.ஸ்டாலின் பேட்டி அளிக்கிறார்
விஜயகாந்த்தை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்
அமித் ஷாவுடன் ஓ.பன்னீர் செல்வம் திடீர் சந்திப்பு
மதுரை விமான நிலையத்தில் வைத்து சந்தித்துப் பேச்சு
சந்திப்பின்போது அமைச்சர் தங்கமணி உடன் இருந்தார்
லோக்சபா தேர்தல் குறித்து பேச்சு நடந்ததாக தகவல்
பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவும் சந்திப்பின்போது இருந்தார்
தேமுதிகவுக்கு கூடுதல் சீட் தருமாறு ஓபிஎஸ்ஸிடம் அமித் ஷா அழுத்தம் தருவதாக தகவல்
ஒருமுறை மட்டுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்- திருமாவளவன்
தற்போது தனி சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிட்டு வருகிறோம் - திருமாவளவன்
வரும் லோக்சபா தேர்தலிலும் தனி சின்னத்திலேயே போட்டியிடுவோம் - திருமாவளவன்
விஜயகாந்த்தை சந்தித்து உடல் நலம் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம் - திருமாவளவன்
தொகுதிப் பட்டியலை திமுக குழுவிடம் வழங்கியுள்ளோம் - திருமாவளவன்
மீண்டும் கலந்துரையாடி தொகுதிகளை முடிவு செய்வோம் - திருமாவளவன்
திமுக குழுவுடன் நடந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது - திருமாவளவன்
எத்தனை இடங்கள் கேட்டுள்ளோம் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் - திருமாவளவன்
விஜயகாந்த்தை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் அடுத்தடுத்து சந்திப்பதால் பரபரப்பு
பாஜக தலைவர்கள் சந்திப்பைத் தொடர்ந்து நேற்று திருநாவுக்கரசர் சந்தித்தார்
இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் போய் பார்த்தார்
திமுக தலைவர் முக.ஸ்டாலினும் விஜயகாந்த்தை சந்திக்கப் போகிறார்
விஜயகாந்த்தை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ஒரு வாரத்தில் நல்ல தகவல் வந்து சேரும் – பிரேமலதா விஜயகாந்த்
திமுக-விடுதலை சிறுத்தைகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை துவக்கம்
அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பம்
விஜயகாந்த்துடனான சந்திப்பில் துளி கூட அரசியல் இல்லை- ரஜினிகாந்த்
அமெரிக்காவில் விஜயகாந்த் சிகிச்சை பெற்றபோதே சந்திக்க முயன்றேன்
விஜயகாந்த் நல்ல மனிதர், நலம் பெற்று திரும்பியுள்ளார் - ரஜினிகாந்த் பேட்டி
விஜயகாந்த்துடன் ரஜினிகாந்த் சந்திப்பு நிறைவடைந்தது
விஜயகாந்த் இல்லத்தில் நிருபர்களுக்கு ரஜினிகாந்த் பேட்டி
திமுக-மதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடக்கம்
அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு
விஜயகாந்த்துடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
நேரில் சந்தித்து விஜயகாந்த் நலம் விசாரிக்கிறார்
40 தொகுதிகளிலும் 24ம் தேதி முதல் வேட்புமனு வினியோகம்: தேமுதிக திடீர் முடிவு
போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தரலாம்- தேமுதிக அறிவிப்பு
பேரம் படியாததால் தேமுதிக தனித்துப் போட்டியா?
அதிமுகவை மிரட்டும் வகையில் 40 தொகுதிகளிலும் வேட்பு மனு வாங்க முடிவா?
அதிமுக- என். ஆர். காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
என்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி மக்களவை தொகுதி ஒதுக்கீடு
திமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தொகுதி பேச்சுவார்த்தை
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆலோசனை
தொகுதி பங்கீட்டு குழுவுடன் ரங்கசாமி ஆலோசனை
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்
ஒபிஎஸ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது
மக்களவை தேர்தலில் கூட்டணியை இறுதி செய்வது தொடர்பான விவாதம் நடத்த கூட்டம்
READ MORE
சென்னை வந்தார் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்
காங்கிரஸ் மேலிடத் தலைவர் வேணுகோபாலும் வருகை
தனியார் ஓட்டலில் காங்கிரஸ் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை
ஆலோசனைக்கு பிறகு திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி போட்டியில்லை?
அதிமுக கூட்டணியில் தமகாவிற்கு மயிலாடுதுறை ஒதுக்கீடு?
ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு என தகவல்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுகவிடம் பட்டியல் அளித்த காங்
காங்கிரஸ் அளித்த தொகுதியில் கடலூர் தொகுதி இல்லை
கே எஸ் அழகிரி வழக்கமாக போட்டியிடும் தொகுதி கடலூர் ஆகும்
கடலூர் கேட்கப்படாததால் கே எஸ் அழகிரி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிகிறது
சென்னை நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனை
திமுக தருவதாக கூறியுள்ள தொகுதிகள் குறித்து இறுதி ஆலோசனை
மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத் உள்ளிட்டோர் பங்கேற்பு
இன்னும் சிறிது நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்களுடன் சந்திப்பு
திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறோம் - திருநாவுக்கரசர்
திமுகவுடன் சற்று நேரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது - திருநாவுக்கரசர்
அறிவாலையம் வந்தார் ஸ்டாலின்
சற்று நேரத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு
துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, பொன்முடி ஆகியோரும் அறிவாலயம் வருகை
பிப்ரவரி 25ம் தேதி மதிமுக உயர்நிலைக்கூட்டம் – வைகோ அறிவிப்பு
மதிமுகவின் லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு
அண்ணா அறிவாலயத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் வருகை
திமுக-காங்கிரஸ் தலைவர்கள் நடுவே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது
காங்கிரஸ் தரப்பில் முகுல் வாஸ்னிக், வேணுகோபால், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்பு
திமுக தரப்பில் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு
திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது திமுக
தமிழகத்தில் 9 இடங்களிலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் போட்டியிடும் - ஸ்டாலின்
எந்தெந்த தொகுதிகள் என்பது மற்ற கட்சிகளுடன் பேசி முடிவு செய்யப்படும் - ஸ்டாலின்
தேமுதிக இணைவதற்கான வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து அறிவிப்போம் - ஸ்டாலின்
இடைத் தேர்தல் தேதி அறிவிக்கட்டும்.. அதுகுறித்து அப்போது முடிவெடுப்போம் - ஸ்டாலின்
தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது - மு.க.ஸ்டாலின்
எங்களது தோழமைக் கட்சிகளுடன் தொடர்ந்து பேசுவோம் - ஸ்டாலின்
அதிமுக கூட்டணியை மக்கள் பண நல கூட்டணி என்று சொல்கிறார்கள் - ஸ்டாலின்
முதல்வர் எடப்பாடியை புத்தகம் போட்டு விமர்சித்தவர் ராமதாஸ் - ஸ்டாலின்
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை
தேர்தல் குழு பொறுப்பாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்பு
விஜயகாந்த்தின் உடல் நலம் விசாரித்தேன்.. திருநாவுக்கரசர் பேட்டி
உடல் நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது - திருநாவுக்கரசர்
விஜயகாந்த், குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தேன்- திருநாவுக்கரசர்
இருவருமே அரசியல்வாதிகள்தான்.. எனவே தேர்தல் குறித்தும் பேசினோம் - திருநாவுக்கரசர்
அரசியல் பேசவில்லை என்று சொன்னால் அது பொய்யாகாதா - திருநாவுக்கரசர் சிரிப்பு
நாட்டின் நலன் கருதி நல்ல முடிவெடுக்குமாறு அவரிடம் கூறினேன் - திருநாவுக்கரசர்
அதற்கு மேல் இப்போது எதுவும் கூற முடியாது - திருநாவுக்கரசர்
35 ஆண்டுகளாக எனக்கு விஜயகாந்த் நண்பர்- திருநாவுக்கரசர்
அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த பிறகு இன்று சந்தித்தேன்
விஜயகாந்த், துணைவியார், மைத்துனருடன் பேசினேன்- திருநாவுக்கரசர்
இன்னும் பூரண குணமடைந்து வர வேண்டும்
தேர்தல் நேரத்தில் நாட்டு நடப்பு பற்றி பேசுவது சகஜம்- திருநாவுக்கரசர்
லோக்சபா தேர்தல்.. நாளை அனைத்து கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை
சென்னையில், தமிழகத்திலுள்ள அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆணையம் ஆலோசனை
கமல் தனித்து போட்டியிடுவது தவறான ஒன்று -அமைச்சர் செல்லூர் ராஜூ
மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவது அவர்களது எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல- செல்லூர் ராஜூ
விஜயகாந்த் கைவிடுவதால் கமலை இழுக்க அதிமுக முயற்சி?
திமுக- இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு
நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் தெரிவித்துள்ளோம்- சிபிஐ
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்- இந்திய கம்யூ
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்
ஒபிஎஸ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது
மக்களவை தேர்தலில் கூட்டணியை இறுதி செய்வது தொடர்பான விவாதம் நடத்த கூட்டம்
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆலோசனை
தொகுதி பங்கீட்டு குழுவுடன் ரங்கசாமி ஆலோசனை
திமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தொகுதி பேச்சுவார்த்தை
அதிமுக- என். ஆர். காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
என்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி மக்களவை தொகுதி ஒதுக்கீடு
40 தொகுதிகளிலும் 24ம் தேதி முதல் வேட்புமனு வினியோகம்: தேமுதிக திடீர் முடிவு
போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தரலாம்- தேமுதிக அறிவிப்பு
பேரம் படியாததால் தேமுதிக தனித்துப் போட்டியா?
அதிமுகவை மிரட்டும் வகையில் 40 தொகுதிகளிலும் வேட்பு மனு வாங்க முடிவா?
READ MORE
English summary
MK Congress alliance will be finalize on today, Congress may get 10 seats, says sources. You can get live tamil news on this page.