அடிச்சு தூக்கும் அதிமுக, திமுக.. அமித்ஷா தேர்தல் என்றால் தவெக? அதானிக்கு சென்னை ஏர்போர்ட்?: பொன்ராஜ்
சென்னை: தவெக வெற்றி பெறுகிறது என்றால், அது இவிஎம் முறையால் மட்டுமே சாத்தியம்.. ஆனால், விஜய்க்கு எதிரான மக்களின் எதிர்ப்பு அலை, மிக தீவிரமாக அடிக்கிறது.. இதை எதிர்ப்பு அலையை அவராலும் தடுக்க முடியாது. மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் ஓட்டுக்கு 5 ஆயிரம் தருவதாக வீடியோக்களும் வெளியாகி கொண்டிருக்கின்றன.. இந்த பணம் யாருடையது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ்.
பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ள பொன்ராஜ், "100 நாட்களில் செல்வாக்கிழந்து, மதிப்பிழந்து, நம்பிக்கையிழந்து, மக்களால் விரட்டியடுக்கப்படுகிறது ஜோசப் விஜய் ஆட்சி.. போகிற இடமெல்லாம் மக்கள் எதிர்ப்பை கட்டுகிறார்கள்.. இனி கட்சி மாற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்..

அதிமுக, திமுக வெற்றி வாய்ப்பு
மக்களின் வெறுப்பையும், அதிமுகவின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளனர் அந்த வேட்பாளர்கள். அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.. உண்மையான தேர்தலாக நடத்தப்பட்டால் ஆளுங்கட்சி டெபாசிட் வாங்காது. திமுக அல்லது அதிமுக வெற்றி பெறும்.
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால், பிரதமராகிவிடலாம் என்று ஒரு ஜோசியக்காரர் சொன்னதை கேட்டு, 9 மீனவ கிராம மக்களை விரட்டுவதா? இனி அவர்களை தொட்டு பார்க்கட்டும் பார்க்கலாம். அம்மக்களை விரட்டி விடட்டுமே பார்க்கலாம்.. ஏர்போர்ட்டை அதானிக்கு தருவதாக, பிரதமருக்கு ஏன் ரகசிய கடிதம் எழுத வேண்டும்? இதுதான் வெளிப்படைத்தன்மையான ஆட்சியா? பரந்தூரை காலி செய்துவிட்டு, சென்னை ஏர்போர்ட்டை தனியாருக்கு தாரை வார்ப்பதா?
2 பிரச்சாரம் செய்த முதல்வர்
திமுக, அதிமுகவைவிட மோசமான ஊழல் கலாச்சாரத்தை இவர்கள் கட்டவிழ்த்து விட்டள்ளார்கள். இதற்கு கரணம் தோற்றுவிடுவோம் என்ற பயம்தான்.. 2 நாள் பிரச்சாரத்துக்கு போவதிலேயே தெரியவில்லையா இவர்களின் பயம்? திமுக மீது பழி போடுவதை தவிர வேறென்ன இந்த தவெகவுக்கு தெரியுமா?
சட்டம் ஒழுங்கு பற்றி இதுவரை பதில் இல்லை.. கம்யூனிஸ்ட்களை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு தகுதி உள்ளதா? எந்த ரீல்ஸ் மூலமாக ஆட்சிக்கு வந்தார்களோ, அதே ரீல்ஸ் மூலமாகவே ஆட்சி ஒழிக்கப்படும்.. அப்படி மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த ஆதாயத்திற்காக மீண்டும் ராஜினாமா செய்து மக்களை நடுத்தெருவில் நிறுத்துவார் என்று கம்யூனிஸ்ட் தலைவர் பெ.சண்முகம் சொல்வது நியாயமான வார்த்தை. எனவே மக்கள் இந்த இடைத்தேர்தலில் தகுந்த பாடம் தரவேண்டும்.
அமித்ஷா தேர்தல்
தவெக வெற்றி பெறுகிறது என்றால், அது இவிஎம் முறையால் மட்டுமே சாத்தியம்.. ஆனால், விஜய்க்கு எதிரான மக்களின் எதிர்ப்பு அலை, மிக தீவிரமாக அடிக்கிறது.. இதை எதிர்ப்பு அலையை அவராலும் தடுக்க முடியாது. மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் ஓட்டுக்கு 5 ஆயிரம் தருவதாக வீடியோக்களும் வெளியாகி கொண்டிருக்கின்றன.. இந்த பணம் யாருடையது?
இந்த 100 நாளில் ஒருதிட்டமும் உருப்படியாக இல்லை.. தங்க மோதிர திட்டம் 10 சதவீதம் கூட தரப்படவில்லை.. மக்களுக்கு காதுகுத்தும் திட்டம்தான் நடந்துள்ளது,.
மதுராந்தகம், தாராபுரத்தில் அதிமுக, திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.. ஆனால், அமித்ஷா தேர்தல் நடந்தால், தவெக வெற்றி பெறும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
