அண்ணன் தம்பியா பழகுறாங்க..பைசனில் வரலாற்றை மாறி மாறி சொல்கிறார் மாரி செல்வராஜ்! அதிமுக சரவணன் புகார்
மதுரை: பைசன் படத்தில் வரலாற்றை மாரி செல்வராஜ் மாற்றி சொல்லியுள்ளார் எனவும், மாரி செல்வராஜை பொறுத்த அளவில் ஒரு கட்சி சார்பாக அவர் செயல்படுகிறார், அவர் படம் தயாரிக்க நிதி அந்த கட்சியில் இருந்து தான் வருகிறது என்கிற ஐயப்பாடு எழுகிறது என அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை செல்லூர் பகுதியில் அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர்.சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," சமீபத்தில் வெளிவந்த பைசன் திரைப்படம் மாரி செல்வராஜ் வெற்றி படமாக எடுத்திருந்தாலும் வரலாற்று பதிவை மறைத்து எடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை அவர் மீது வைக்கிறேன்.
படம் எடுங்க.. உங்களுக்கான வலிகளை சொல்லுங்க. அதே நேரம் அந்த கதையில் கூட ட்ராவல் பண்ணினவர்கள் பற்றிய வரலாற்றையும் சொல்லுங்கள். அப்போதுதான் உண்மையான வரலாறு மக்களுக்கு போய் சேரும். ஏதோ குறிப்பிட்ட குரூப்புக்காக படம் எடுத்த மாதிரி தெரிகிறது.

டாக்டர் பா.சரவணன்
மனத்தி கணேசன், காசிநாத பாஸ்கரன், ராஜரத்தினம் ஆகியோர் தமிழக மண்ணின் மைந்தர்கள். ஐயா சிவந்தி ஆதித்தனாரின் Sun Paper Mills கபடி அணியின் பயிற்சியாளர் கிரிஸ்டோபர் ராஜன் அவர்கள் தான் காட்ஃபாதர். நடுநிலையான கலைஞராக இருக்கணும். அதே போன்று கதைகளில் புனை இருக்கணும் . ஆனா இந்த மாதிரி பிரிவு இருக்கக் கூடாது. வரலாற்றைப் பிரிக்க கூடாது. மாறி மாறி சொல்கிறார் மாரி செல்வராஜ். பைசன் என்கிற பெயர் அந்த மாவட்டத்தில் மனத்தி கணேசனுக்கு பெயர் இருந்தது.
பைசன் படம்
பைசன் கணேசனுக்கு மட்டுமல்லாமல் பாஸ்கர் சார், ராஜரத்தினம் சார் இவர்களையும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கௌரவப்படுத்தினார்கள். இந்த படத்தை எடுத்த மாரி செல்வராஜ் தனது வலிகளை சொல்வதாக நியாயப்படுத்துகிறார். இப்போது யார் எந்த சமுதாயம் எனத் தெரியாத அளவுக்கு ஒன்றாக கலந்து பழகி வருகிறார்கள். கடந்த காலத்துல ஒரு சில இடங்கள்ல இப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் திருப்பி திருப்பி இந்த மாதிரியான விஷயங்களை எடுத்து மக்கள் மனதில் வேற்றுமையை விதைத்து சாதிய மோதல்கள் ஏற்படும் அளவுக்கு இல்லாமல் நல்ல கருத்துள்ள படத்தை எடுக்கலாம்.
மாரி செல்வராஜ்
ஒரே கருத்தை மட்டும் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த படத்தைப் பொறுத்தளவில் சாதிய மோதல்களை தூண்டக்கூடிய விஷயமாகத்தான் பார்க்கிறேன். கபடி வீரர்களுக்கு ஆட்சியில் இருந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் வீடு- அரசு வேலை என வழங்கி கௌரவபடுத்தினார்கள். அதே போன்று விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீட்டினை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கினார்கள்.
வரலாறு மாற்றம்
அது மிகப் பெரிய விஷயம் அந்த விஷயம் மக்களிடம் போகணும் அப்போ தான் உண்மையான வீரர்களுக்கு ஊக்கம் தரும். உண்மையான கலைஞன் பாகுபாடு இல்லாமல் இந்த விஷயங்களையும் காட்டி இருக்க வேண்டும் ஆனால் உண்மையை மறைத்து அவர் சொல்லுகிறார். அவர் யாருக்கு எடுத்தார்ன்னு தெரியும் அடுத்து யாருக்கு எடுக்க போறாருன்னு தெரியும். படம் பண்ணலாம். ஆனா அது மக்கள் மனதை நோக அடிக்க கூடாது. மாரி செல்வராஜை பொறுத்த அளவில் ஒரு கட்சி சார்பாக அவர் செயல்படுகிறார். அவர் படம் பண்ண நிதி அந்த கட்சியில் இருந்து தான் வருகிறது என்கிற ஐயப்பாடு எழுகிறது" என்றார்.
-
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி












Click it and Unblock the Notifications