கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது?
சென்னை: தமிழக அரசியலில் 'கூட்டணி' காய்ச்சல் தகித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை தமிழகத்தில் கூட்டணி என்றாலே 'போயஸ் கார்டன்' 'அறிவாலயம்' 'சித்தரஞ்சன் சாலை' அல்லது 'கிரீன்வேஸ் சாலை'யை நோக்கித்தான் மற்ற கட்சிகள் படையெடுக்கும். ஆனால், இப்போது சீன் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது.
நேற்று எடப்பாடி பழனிசாமி (EPS) டெல்லிக்கு விசிட் அடித்தார். அவரைத் தொடர்ந்து இன்று அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் என வரிசையாக தமிழகத் தலைவர்கள் டெல்லியில் தவம் கிடக்கிறார்கள். இந்த 'டெல்லிப் பயணம்' தமிழக அரசியலில் ஒரு முக்கியமான மாற்றத்தை உரக்கச் சொல்லியிருக்கிறது.

அதிமுக-வா? பாஜகவா? யார் 'பிக் பாஸ்'?
"தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவோம்" என்று எடப்பாடி தரப்பு எவ்வளவோ மார்தட்டிப் பார்த்தது. ஆனால், தற்போதைய சூழலைப் பார்த்தால், 'ரிமோட் கண்ட்ரோல்' முழுக்க முழுக்க அமித்ஷாவின் கைகளில் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
முன்பெல்லாம் டெல்லித் தலைவர்கள் சென்னைக்கு வந்து அதிமுக தலைமையுடன் பேசுவார்கள்.
ஆனால் இப்போது, ஒரு மாநிலக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தும், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி டெல்லிக்குச் சென்று காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்தாரா எடப்பாடி?
கூட்டணிக்குள் யார் இருக்க வேண்டும், யாருக்கு எத்தனை சீட் என்பதை எடப்பாடி தீர்மானிப்பார் என்று எதிர்பார்த்த ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. "எல்லாம் மேலிடம் முடிவு செய்யும்" என்ற ரேஞ்சுக்கு பிஜேபி காய்களை நகர்த்துகிறது. குறிப்பாக, எடப்பாடியின் பிடிக்குள் வராத டி.டி.வி.தினகரன் போன்றவர்களையும் ஒரே மேஜையில் அமர வைக்கும் வேலையை அமித்ஷா கச்சிதமாகச் செய்து வருகிறார்.
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா
அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்படும் தமிழகத்தில், இப்போது சீட் ஒதுக்கீட்டையும், வியூகத்தையும் டெல்லி தீர்மானிப்பது, அதிமுக-வின் 'தலைமை' அந்தஸ்துக்கு விழுந்த அடியாகவே பார்க்கப்படுகிறது.
"தமிழகத்தில் கால் பதிக்கத் துடிக்கும் தாமரை, அதிமுக-வை வெறும் 'கூட்டணித் தோழனாக' மட்டும் பார்க்கவில்லை; அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு கருவியாக மாற்ற நினைக்கிறதோ?" என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அமித்ஷா போடும் கணக்குக்கு எடப்பாடி தலையாட்டுவாரா அல்லது தன் 'கொங்கு' பாணியில் அதிரடி காட்டுவாரா?
புகைச்சலில் அதிமுகவினர்
தமிழக அரசியலில் தற்போது டெல்லி வரை எதிரொலிக்கும் கூட்டணி விவகாரத்தில், அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவிதமான புகைச்சல் கிளம்பியுள்ளது. பிரதமர் மோடி தமிழகத்தில் பங்கேற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமியுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டாலும், அவரைத் தனது உரையில் 'கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்' என ஒருமுறை கூட அடையாளப்படுத்தவில்லை என்பது அரசியல் பார்வையாளர்களிடையே உற்றுநோக்கப்படுகிறது.
அமித் ஷா மற்றும் பியூஷ் கோயல் போன்ற மேலிடத் தலைவர்கள் எடப்பாடியே முதல்வர் முகம் என்று முன்னரே குறிப்பிட்டிருந்தாலும், ஒரு நாட்டின் பிரதமரே அந்த அங்கீகாரத்தை அதிகாரப்பூர்வமாக வழங்கத் தயங்குவது, தமிழக பாஜகவின் தனித்துவமான வியூகத்தையோ அல்லது தேர்தல் முடிவுகளுக்குப் பின் 'கிங் மேக்கர்' இடத்தைப் பிடிக்க டெல்லி மேலிடம் போடும் கணக்கையோ காட்டுவதாக உள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம்... டெல்லி தர்பாரில் தமிழக அரசியல் என்னவாகப் போகிறது என்று!
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications