ஜெயலலிதா ஸ்டைலில்.. அடித்து ஆடும் எடப்பாடி பழனிசாமி.. பிப்ரவரி 24ம் தேதி.. நாள் குறிச்சிட்டாராமே!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது ஜெயலலிதா பொதுவாக இதேபோல் வேகமாக செயல்படுவார்.. அதே ஸ்டைலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டு துருவங்களும் தங்கள் வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், தேர்தல் முன்னேற்பாடுகளில் அதிமுக ஒரு படி முன்னிலையில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் பிப்ரவரி கடைசி வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேற்கு வங்க SIR இறுதி லிஸ்ட் பிப்ரவரி 28ம் தேதி வரலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் அதற்கு மறுநாள் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிப்பிடப்படும். பெரும்பாலும் தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக இந்த தேர்தலுக்காக கூட்டணி அமைப்பதை விட களப்பணி செய்வதை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பிப்ரவரி 24: அதிமுகவின் 'மாஸ்டர் பிளான்'
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), இந்த முறை தேர்தலை மிகவும் திட்டமிட்டு அணுகுகிறார். பாமக, பாஜக மற்றும் தேமுதிக உள்ளிட்ட முக்கிய கட்சிகளுடன் ஏற்கனவே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை ரகசியமாகவும் வேகமாகவும் முடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பதில் ஒரு தெளிவு கிடைத்துள்ள நிலையில், தற்போது வேட்பாளர் தேர்வில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவிப்பதன் மூலம், தொகுதிப் பணிகளைச் செய்ய அவர்களுக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என்பது அக்கட்சியின் கணக்கு. ஜெயலலிதா பொதுவாக இதேபோல் வேகமாக செயல்படுவார்.. அதே ஸ்டைலை எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் இழுபறியா?
மறுபுறம், ஆளுங்கட்சியான திமுக இன்னும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளையே முழுமையாகத் தொடங்கவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. 'இந்தியா' கூட்டணி வலுவாக இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறி வந்தாலும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்கள் இன்னும் களத்தில் இறங்கவில்லை.
காங்கிரஸ் எதிர்பார்ப்பு: கடந்த முறையைப் போலவே அதிக தொகுதிகளைப் பெற காங்கிரஸ் விரும்புவதும், ஆனால் திமுக அதைத் தர தயங்குவதும் காலதாமதத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளும் தங்களுக்குப் போதுமான தொகுதிகளை ஒதுக்க இப்போதே அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டன.
அரசு விழாக்களிலும், நலத்திட்டங்களிலும் கவனம் செலுத்தி வரும் திமுக, வரும் பிப்ரவரி இறுதியில் தான் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்தும் எனத் தெரிகிறது.
கள நிலவரம்
அதிமுகவின் வேகம் அக்கட்சித் தொண்டர்களிடையே ஒரு புதுத்தெம்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கூட்டணி இறுதி செய்யப்பட்டு வேட்பாளர் பட்டியல் தயாராகி வருவது அதிமுகவின் பலமாகக் கருதப்படுகிறது. அதேநேரம், திமுக நிதானமாக காய் நகர்த்தி, கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படுத்தி பெரிய கூட்டணியைத் தக்கவைக்கப் போராடி வருகிறது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications