அண்ணாமலை பதவி பறிபோகும் வரை காத்திருந்து.. அமித் ஷாவை சந்திக்க ஒப்புக்கொண்ட எடப்பாடி.. வைராக்கியம்!
சென்னை: பாஜக மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். சற்று நேரத்தில் ஐடிசி ஹோட்டலில் இவர்கள் சந்திக்க உள்ளனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை பதவி பறிபோகும் வரை காத்திருந்து.. அமித் ஷாவை சந்திக்க ஒப்புக்கொண்டு உள்ளார் எடப்பாடி பழனிசாமி. இவ்வளவு நேரம் எடப்பாடி பழனிசாமி வீட்டு கதவை கூற திறக்கவில்லை. வைராக்கியமாக இருந்த எடப்பாடி அண்ணாமலை பதவி போனதும் இப்போது ஐடிசி ஹோட்டலுக்கு விரைந்து உள்ளார்.
அண்ணாமலை போனால்தான் கூட்டணிக்கு ஓகே சொல்வேன் என்று எடப்பாடி கூறியதாகவும் ஒருசாரார் கருத்து வைக்கின்றனர். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். இவருக்கு மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சி தலைமை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவரானார் நயினார் நாகேந்திரன். அவர் போட்டியின்றி அண்ணாமலை இடத்தை நிரப்ப உள்ளார். பாஜக மாநில தலைவர் ஆக 10 வருடம் கட்சியில் இருக்க வேண்டும். ஆனாலும் அது அடையாள விதிதான் கட்டாய விதி கிடையாது. இந்த நிலையில் அண்ணாமலை நீக்கப்பட்டு 8 வருடமாக கட்சியில் உறுப்பினராக இருக்கும் நயினார் அந்த இடத்தை பிடித்து உள்ளார்.
எடப்பாடி அண்ணாமலை
அண்ணாமலையை மாற்ற எடப்பாடி டெல்லிக்கு பிரஷர் தந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பின் எடப்பாடியின் பெர்சனல் காரணம் ஒன்று இருக்கிறது என்கிறார்கள் எடப்பாடியின் ரகசியம் அறிந்தவர்கள்.
அதாவது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சர், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர், கட்சியில் தனக்கு போட்டியாளர்களை நீக்கி வைத்தல், பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் என அதிகாரத்தின் முக்கிய பீடத்தில் இருந்தார் எடப்பாடி. அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள நிறையவே உழைத்திருக்கிறார்.
ஆட்சியை பிடிக்க வாய்ப்பு
இந்த நிலையில், திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க சக்தி வாய்ந்த ஒரே இயக்கமான அதிமுக, தனது சமூகத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமியின் வசம் இருப்பதை வலிமையாக நினைக்கிறது கொங்கு வேளாளர் சமூகம். அதற்கேற்ப அந்த சமூகத்தின் ஆகப்பெரிய தொழிலதிபர்களின் நட்பில் இருந்து வருகிறார் எடப்பாடி. எடப்பாடியும், கொங்கு வேளாளர் சமூகத்தில் தன்னைத் தவிர்த்து இன்னொருவர் வலிமையாக வளர்வதை விரும்பவில்லை. அது, அதிமுகவாக இருந்தாலும் சரி ; அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளில் இருந்தாலும் சரி.
அந்த வகையில், பாஜக தலைவர் அண்ணாமலை, எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருடைய 3 ஆண்டுகால அரசியல் நடவடிக்கைகள், தமிழக அரசியலையும் கடந்து கொங்கு வேளாளர் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதே நிலை நீடித்தால், எடப்பாடிக்கு இணையாகவும் போட்டியாகவும் எதிர்காலத்தில் அண்ணாமலை உருவாவார் என்பது எடப்பாடிக்குச் சொல்லப்பட்ட தகவல். எடப்பாடியும் இந்த கணக்கை ஏற்கனவே போட்டு வைத்திருந்தார்.
அண்ணாமலை
சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்து, அப்போதும் அண்ணாமலையே பாஜகவின் தலைவராக இருக்கும் சூழலில், அதிமுகவின் வாக்கு வங்கியில் அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் தேர்தலில் வெற்றிப்பெற்றால் அது நமக்கே எதிராகத்திரும்பும் என்றும், கொங்கு சமூகத்தில் தன்னைத் தவிர்த்து இன்னொருவர் உருவாகக்கூடாது என்றும் திட்டமிட்டுதான் அண்ணாமலையை தலைவர் பதவியில் மாற்றுங்கள் ; தமிழக அரசியலை விட்டுவிட்டு தேசிய அரசியலுக்கு அவரை இழுத்துக் கொள்ளுங்கள் என்று பாஜக தலைமையிடம் நிபந்தனையை கோரிக்கையாக வைத்தார் எடப்பாடி.
ஆக, அண்ணாமலைக்கு எதிராக எடப்பாடி வாள் சுழற்றுவதற்கு இதுதான் உண்மையான காரணமே தவிர, எடப்பாடியை ஒருமையில் பேசி விட்டார் ; அதிமுகவை விமர்சித்து விட்டார் என்பதல்ல! என்கிறார்கள் இந்த ரகசியத்தை அறிந்த அதிமுகவினர். எடப்பாடியின் இந்த ரகசியத் திட்டமிடல் அண்ணா மலைக்கும் தெரியும் என்கிற தகவலும் அதிமுக தரப்பில் உலா வருகிறது.












Click it and Unblock the Notifications