இதெல்லாம் ரொம்ப தப்புங்க.. நானும் ஒரு அப்பா தான்! உறைய வைத்த உடுமலை.. எகிறிய எடப்பாடி பழனிசாமி..!
சென்னை: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராகத் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சிறுமி கூட்டு பாலில் வன்கொடுமை சம்பவத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஒன்பது பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை செய்த ஜெய காளீஸ்வர், மதன்குமார், பரணி குமார், பிரகாஷ் நந்தகோபால், பாவா பாரதி மற்றும் 14,15,16 வயதுடைய 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உடுமலை சம்பவம்: கைது செய்யப்பட்டவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆறு பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மூன்று சிறுவர்கள் திருப்பூரில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராகத் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்கதையாகிவிட்டன. பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாகத் திகழ்ந்த தமிழ் நாட்டை, பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு விடியா திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.
பாலியல் வன்கொடுமை: கடந்த சில மாதங்களாகவே, தொடர்ச்சியாக அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், 4 மாத கர்ப்பமான நிலையிலேயே வெளியில் தெரியவந்துள்ளது. காவல் துறை விசாரணையில், இந்த கொடூரச் செயலை செய்த கும்பல் மேலும் ஒரு சிறுமியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் சமூக வலைதளங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.
திமுக ஆட்சி: திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளையும், போதைப்பொருள் புழக்கத்தால் நடைபெறும் குற்றச் செயல்களையும் நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளேன். சிறார்கள்-இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. தற்போது, நெஞ்சை பதைபதைக்கும் இத்தகு குற்றச் செயல்களைக் கூட சட்டத்தின் மீதோ, காவல் துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செய்யத் துணிந்துவிட்டனர் சமூக விரோதிகள். இந்த திமுக ஆட்சி தமிழ் நாட்டை அலங்கோல நிலைக்கு தள்ளிவிட்டதன் அடையாளம் தான் மேற்கண்ட நிகழ்வு.


கடும் கண்டனம்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை; அம்மாவின் ஆட்சியில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கழக அரசு சட்டத்தின் நெறிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்தும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி திசை திருப்பினார். அன்று தன்னை பெண்களின் பாதுகாவலராக அறிவித்து முழங்கிய ஸ்டாலின், தற்போது முதலமைச்சராக இருக்கும் இந்த விடியா திமுக ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கடும் நடவடிக்கை: திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் குறித்து நான் பேசுகின்றபோது, தேர்தல் ஆதாயத்திற்காக இல்லாமல், ஒரு குடும்பத் தலைவனாக நம் பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பிலேயே பேசினேன். தற்போது பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இத்தகு பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தத் தவறிய திமுக அரசை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல், ஒரு தந்தை என்கிற அக்கறையுடனே கண்டிக்கிறேன். உடுமலைப்பேட்டை பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
-
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே!












Click it and Unblock the Notifications