திமுக + விஜய்.. இருமுனை தாக்குதலில் இருந்து தப்பிக்குமா அதிமுக? கொங்கு மண்டலத்தை நம்பும் எடப்பாடி!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகள் பெரும்பாலானவை அதிமுகவுக்கு எதிராகவே வந்துள்ளது. குறிப்பாக சென்னை, டெல்டா மற்றும் தெற்கு மண்டலங்களில் பின்னடைவை சந்திக்கும் அதிமுக, வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மண்டலத்தையே அதிகமாக நம்பி இருக்கிறது. அதிலும் சில தொகுதிகளை அதிமுக இழக்கக் கூடும் என்று தெரிகிறது.
அக்னி நியூஸ் சர்வீஸ் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகளில் அதிமுக மேற்கு மண்டலத்தில் 19 தொகுதிகளையும், வடக்கு மண்டலத்தில் அதிமுக 18 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு பகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக இருந்தாலும், திமுக மற்றும் தவெக மிகப்பெரிய ஓட்டையை போடுவதாக தெரிகிறது.

2021ல் இந்த இரு மண்டலங்களில் அதிமுக - பாமக - பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு, கொங்கு மண்டல முதலாளிகள் வர்க்க ஆதரவு, ஆளும் கட்சி செல்வாக்கு ஆகியவை அதிமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் இம்முறை பாமக பிளவு, கொங்கு மண்டல முதலாளிகள் வர்க்க ஆதரவு இல்லை.
ஆளும் கட்சி செல்வாக்கு திமுக கூட்டணி பக்கம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள், பெண்கள் வாக்குகளை விஜய் அதிகளவில் பிரிக்கிறார். கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு பெரிதாக இழப்பதற்கு ஒன்றும் இல்லாத சூழலில், விஜய் அதிமுகவின் வாக்குகளை அதிகமாக வாங்குகிறார். மேற்கு மண்டலத்தில் தவெக 15.77% வாக்குகளையும், வடக்கு மண்டலத்தில் தவெக சுமார் 14% வாக்குகளையும் பெறுகிறது.
இதன்படி பார்த்தால், அதிமுகவுக்கு மிகப்பெரிய சிக்கலாக விஜய் மாறுவார் என்று பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் கொங்கு மண்டலத்தில் வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் திமுக கொங்கு மண்டலத்தில் பல பணிகளை செய்து முடித்துள்ளது. செந்தில் பாலாஜி கோவையில் 5 தொகுதிகளையாவது வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
இன்னொரு பக்கம் அதிமுகவின் இடத்தை தவெக பிடிக்க தயாராகி வருகிறது. கொங்கு மண்டலத்தில் அல்லாமல், தெற்கு மண்டலம் மற்றும் சென்னை மண்டலங்களில் தவெகவின் வளர்ச்சி அபரிதமாக இருப்பதாக எக்ஸிட் போல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைக்கவில்லை என்றால், விஜய் அந்த இடத்தை பிடிப்பார் என்று பார்க்கப்படுகிறது.
-
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு












Click it and Unblock the Notifications