Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயை லெஃப்ட். ஹேண்டில்.. அப்படியே ஒதுக்கி தள்ளிய எடப்பாடி.. வேண்டாமே வேண்டாம்.. இப்படி ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் எதையும் நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறி இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் இந்த பேச்சுக்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தேமுதிக - அதிமுக இரண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் திமுகவை வீழ்த்திய அரசியல் வரலாறு தமிழ்நாட்டில் மறக்க முடியாதது. அதேபோன்ற வரலாற்றை மீண்டும் விஜயை வைத்து செய்யலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று சமீபத்தில் கூறப்பட்டது.

Edappadi Palanisamy TVK Vijay

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக விஜயிடம் எடப்பாடி பழனிச்சாமி ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் அதிமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்ததாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்தன..

விஜய்க்கு ஆதரவாக பேசிய எடப்பாடி

சமீபத்தில் கூட அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசி இருந்தார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

திடீரென நிலைப்பாடு மாற்றம்

இப்போது திடீரென தமிழக வெற்றிக்கழகம் உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் எதையும் நடத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறி இருப்பது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் இந்த பேச்சுக்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

1. விஜய்க்கு போதிய செல்வாக்கு இல்லை என்று எடப்பாடிக்கு தெரிந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜய்க்கு போதிய மக்கள் ஆதரவு இல்லை. ரசிகர்கள் ஆதரவு மட்டுமே உள்ளது.

2. விஜயிடம் கூட்டணி கேட்டு போனால்.. அவர் அதிக இடங்களை கேட்பார். அவரிடம் நாம் இறங்கி செல்ல கூடாது. நாம்தான் பெரிய கட்சி என்று எடப்பாடி நினைக்கிறார்.

3. விஜய் கட்சியில் சரியான கட்டமைப்பு இல்லை. கட்சி வட்டாரங்களின்படி, வாக்குகள் அல்லது கள ஆதரவு ரீதியாக பெரிய பங்களிப்பு செய்ய வாய்ப்பில்லாத ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து எந்த அரசியல் ரிஸ்கையும் எடுக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

4. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிமுக கூட்டணிக்கு விஜய் வரப்போவதாக மறைமுகமாக தெரிவித்து வந்த எடப்பாடி.. தற்போது அதை நிறுத்தி உள்ளார். விஜய் பற்றி பேசுவதையே அடியோடு கைவிட்டு உள்ளார் எடப்பாடி.

5. இந்த முடிவு, அதிமுக நடத்திய ஓர் உட்கட்சி ஆய்வுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் பற்றி எடப்பாடி பழனிசாமி நடத்திய சர்வே ஆய்விற்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

6. அதிமுக தலைவர்கள், தனது சொந்தக் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவும், வாக்காளர்களைக் குழப்பவோ அல்லது அதிமுகவின் பாரம்பரிய ஆதரவை பலவீனப்படுத்தவோ கூடிய எந்தக் கூட்டணியையும் தவிர்க்கவும் அவருக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதை அந்த ரிப்போர்ட்டில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+