வேலூரில் ஸ்கெட்ச் போட்டு அதிமுக முன்னாள் சுகாதாராத்துறை அமைச்சர் விஜய்யை தூக்கிய ஸ்டாலின்

கட்சியில் அதிருப்தியில் இருப்பவர்களை தங்கள் பக்கம் இழுப்பது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிமுகவின்முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ். விஜய் திமுகவில் இணைந்துள்ளார். ஸ்டாலின் முன்னி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் அதிமுகவில் மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். அது கிடைக்காமல் போகவே இப்போது ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இருந்து முக்கிய தலைகள் கழன்று கொண்டு போகும் நிலையில் அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை திமுகவின் பக்கம் ஸ்கெட்ச் போட்டு நகர்த்தி வருகிறார் ஸ்டாலின்.

கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் வி.எஸ். விஜய். திடீரென்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. இதனையடுத்து மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டார் வி.எஸ்.விஜய். கட்சி பொறுப்பில் இல்லாவிட்டாலும் நீண்ட நாட்களாக பதவியை எதிர்பார்த்து காத்திருந்தார் விஜய். எந்த பலனும் இல்லை.

EX minister VS Vijay joins ADMK

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலூர், காட்பாடி தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் மாநகர் மாவட்டத்துக்கு, எஸ்ஆர்கே அப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். குடியாத்தம் கீழ்வைத்தியனான்குப்பம், அணைக்கட்டு தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் புறநகர் மாவட்ட செயலாளராக வேலழகன் நியமிக்கப்பட்டார்.

மாவட்ட மருத்துவ அணியில் இணைச்செயலாளர் பொறுப்பு மட்டுமே விஜய்க்கு கொடுக்கப்பட்டது. தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று விஜய் எதிர்பார்த்திருக்க அது கிடைக்காமல் போகவே, அதிருப்தி மனநிலையில் இருந்ததாக தெரிகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார் துரைமுருகன்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துரைமுருகன் மகனும், வேலூர் தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்திடம் பேசியுள்ளார் விஜய். இந்த நிலையில் திமுகவில் இணைந்துள்ளார் விஜய். ஸ்டாலின் முன்னிலையில் விஜய் திமுகவில் இணைந்த போது துரைமுருகன், கே.என் நேரு உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+