அடடே அவங்களா? முகத்துலயே முந்நூறு எக்ஸ்பிரஷன் காட்டுவாங்களே! சசிகலாவைப் பிரிந்த நெல்லை வெண்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் பிரமுகரும், சசிகலாவின் தீவிர ஆதரவாளருமான நெல்லை வெண்மதி சசிகலாவை விட்டு விலகுவதாக கூறி அதிர வைத்து இருக்கிறார். பல ஆண்டுகளாக சசிகலாவின் நிழல் போல் பயணித்த அவர், தற்போது திடீரென விலகுவதற்கான காரணம் என்ன? என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஒன்றிணைந்த அதிமுகவாக இருந்தபோது நெல்லை மாவட்ட ஐடி விங் செயலாளராக இருந்தவர் நெல்லை வெண்மதி. அதிமுக பிளவுபட்ட பிறகு சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். சசிகலாவின் நிழல் என்று கூட சொல்லலாம்.

சசிகலா சிறைக்கு சென்று வந்த பிறகு அவரது நிழல் போலவே கூடவே பயணித்தவர். தமிழ்நாடு முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருக்கு துணையாக பயணம் செய்தவர். மேலும், கடந்த காலங்களில் சசிகலா சுற்றுப் பயணம் செய்த போது, அவரது செய்தியாளர் சந்திப்புகளின் போதும் கூடவே இருந்தவர்.

Nellai Venmathi

நெல்லை வெண்மதி

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட சசிகலா பேட்டி அளித்த போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த வெண்மதி கொடுத்த முக பாவனைகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனை வைத்தே ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் நெட்டிசன்கள் மூலம் பறக்க விடப்பட்ட நிலையில் அவர் யார் என தேடத் தொடங்கும் அளவுக்கு பேமஸ் ஆனார். இந்த நிலையில் அப்போது சசிகலாவின் பேட்டியை விட அவரது முகபாவனைகள் தான் பேசப்பட்டது. அதை அடுத்து மிகவும் பிரபலமானார் நெல்லை வெண்மதி.

சசிகலா

இந்நிலையில், சசிகலாவுக்கு நெருங்கிய உறவினரான ஒருவர் வெண்மதியை தொடர்பு கொண்டு "நீ கொடுத்த ரியாக்ஷனால் சசிகலா கொடுத்த பேட்டியை காமெடி நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது.. இனிமேல் அவர் அருகில் நீ நிற்கக்கூடாது" என ஒருமையில் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து சசிகலாவை தொடர்பு கொண்டு பேசிய வெண்மதி,"நான் உங்களுடன் பயணிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை" என புலம்பினாராம். ஆனால் சசிகலா இதனை கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

நெல்லை வெண்மதி விலகல்

இதை அடுத்து வெண்மதி சசிகலாவின் சுற்றுப்பயணங்களில் தலை காட்டவில்லை. இந்த நிலையில் திடீரென சசிகலாவை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார் வெண்மதி. இது தொடர்பாக பேசி இருக்கும் அவர்," ஜெயலலிதாவோடு 33 ஆண்டுகள் பயணித்த சசிகலா மிகப்பெரிய தலைவர். அவர் எனக்கு ஒரு குரு போல். ஆனால் தற்போது சிலரின் நெருக்கடி காரணமாக அவர் அமைதியாக இருக்கிறார். சசிகலாவை சிலர் சூழ்ந்துள்ளதால் எனக்கு அங்கீகாரம் இல்லை என்பதால் தற்போது நான் அமைதியாக இருக்கிறேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை சசிகலாவின் அரசியல் பாதையில் எனக்கு உடன்பாடு இருந்தது.

எடப்பாடி பழனிசாமி

அதற்கு பிறகு அவரது அரசியல் அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை. சசிகலா ஆக்ரோஷமான அரசியல் செய்யவில்லை என்பதால் எனக்கு வருத்தம் ஏற்பட்டது. எம்ஜிஆர் மக்களை நேரடியாக சந்தித்து நியாயம் கேட்டார். ஆனால் சசிகலா அதனை செய்யவில்லை. அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு பாஜக தான் காரணம். அதனால் தான் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார். தற்போதைக்கு சசிகலாவின் அரசியல் பாதை பிடிக்காதால் அவரிடமிருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+