திரும்பும் திமுக! நீட் தேர்வு ரத்துக்கான கையெழுத்து இயக்கத்தில் அதிமுகவா? 4 கேள்வி கேட்ட விஜயபாஸ்கர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திமுக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி உள்ளது. இதில் அதிமுக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் 4 முக்கிய கேள்விகள் கேட்டு திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உண்ணாவிரத போராட்டத்தை திமுக நடத்தியது. இந்நிலையில் தான் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

AIADMK ex minister Vijayabaskar raises 4 question to DMKs NEET Signature movement

அதன்படி நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம் தற்போது தொடங்கி உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு திமுக தலைவர்கள் நீடர் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டு வருகின்றனர். சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் திமுக ஐடி விங்க் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தனது கையெழுத்தையும் பதிவு செய்தார்.

இதேபோல், தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள்,எம்எல்ஏக்கள், திமுகவின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கையெழுத்திட்டு வருகின்றனர். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெற்று சேலம் திமுக இளைஞர் அணியின் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்படும். அதன்பிறகு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இந்த கையெழுத்து இயக்கத்தில் அதிமுகவினரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் 4 முக்கிய கேள்விகளை எழுப்பி திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சி விஜயபாஸ்கர் கூறியதாவது:

நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் என திமுக நாடகம் நடத்தும் நிலையில் அதிமுக எப்படி பங்கேற்க முடியும்? அதோடு நீட் விஷயத்தில் யாருக்கு எதரிாக திமுக கையெழுத்து இயக்கம் நடத்துகிறது? நீட் தேர்வுக்கு முதல் கையெழுத்திட்ட காங்கிரஸை எதிர்த்தா? அல்லது உச்சீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தா? என 4 கேள்விகள் உள்ளன. இதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.

நீட் தேர்வு என்பது விஷவிதை என்றால் அதை விதைத்தது காங்கிரஸ். ஜல்லிக்கட்டுக்கு பாதகம் செய்ததும், நீட் தேர்வில் பாதகம் செய்ததும் காங்கிரஸ் கட்சி தான். நீட் தேர்வ பாதிப்பை ஏற்படுத்தினாலும் அந்த பாதிப்பை குறைக்கும் வகையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கிறது.

நீட் விவகாரத்தில் 38 திமுக எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுதான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. நீட் தேர்வை எதிர்த்து ‛‛இந்தியா'' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் திமுக கையெழுத்து வாங்குமா? என்பதை விளக்க வேண்டும்'' என திமுகவை விளாசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+