Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவின் அன்பழகனையே வீழ்த்தியவர்.. ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கியவர்.. தவெகவில் இணைந்த ஜேசிடி பிரபாகர் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் இன்று தவெகவில் இணைந்தார். தவெக தலைவர் விஜயை சந்தித்து ஜேசிடி பிரபாகர் தன்னை தவெகவில் இணைத்து கொண்டார். சமீபத்தில் அவரது மகன் தவெகவில் சேர்ந்த நிலையில் இன்று ஜேசிடி பிரபாகர் தவெகவில் ஐக்கியமாகி உள்ளார். திமுகவின் பொதுச்செயலாளராக இருந்து மறைந்த கே அன்பழகனையே வீழ்த்தியதோடு, தற்போதைய முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் களமிறங்கிய ஜேசிடி பிரபாகரனின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து பிரபலங்கள் இணைந்து வருகின்றன. சமீபத்தில் தான் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், மாஜி அமைச்சருமான செங்கோட்டையன் இணைந்தார். இவரது வருகை தவெகவிற்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. பொதுக்கூட்டம், பிரசார நிகழ்ச்சிகளை எப்படி நடத்த வேண்டும் என்பதில் செங்கோட்டையன் நிபுணத்துவம் பெற்றவர். அதனை தற்போது தவெக பின்பற்ற தொடங்கி உள்ளது.

aiadmk-ex-mla-jcd-prabhakar-joins-tvk-who-is-he-and-how-he-defeated-dmk-k-anbazhagan-full-details

இந்நிலையில் தான் செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் தவெகவில் இன்று இணைந்தார். சென்னையில் தவெக தலைவர் விஜயை இன்று சந்தித்து ஜேசிடி பிரபாகர் தன்னை தவெகவில் இணைத்து கொண்டார். கடந்த மாதம் தான் ஜேசிடி பிரபாகரின் மகன் அமலன் தவெகவில் சேர்ந்தார். மகனை தொடர்ந்து தற்போது தந்தை ஜேசிடி பிரபாகர் தவெகில் ஐக்கியமாகி உள்ளார்.

இந்நிலையில் தான் ஜேசிடி பிரபாகர் யார்? என்பது பற்றி பலரும் தேட தொடங்கி உள்ளனர். இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாவார். அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருந்தவர். சென்னையில் உள்ள வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏவாக 2 முறை தேர்வாகி இருந்தார். இவர் முதல் முறையாக 1980ம் ஆண்டில் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தார். அதன்பிறகு 1984, 1989ல் இந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

நீண்டகாலத்துக்கு பிறகு மீண்டும் 2011ம் ஆண்டில் வில்லிவாக்கம் தொகுதியில் ஜேசிடி பிரபாகர் களமிறங்கினார். திமுக சார்பில் பொதுச்செயலாளராக இருந்த கே அன்பழகன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜேசிடி பிரபாகர் மொத்தம் 68,612 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் கே அன்பழகன் 57,830 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார். கே அன்பழகனை, ஜேசிடி பிரபாகர் 10,782 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் அவர் தமிழக அளவில் கவனம் பெற்றார்.

அதன்பிறகு 2016ம் ஆண்டில் தொகுதி மாறி களமிறங்கினார். தற்போதைய முதல்வராக உள்ள ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜேசிடி பிரபாகர் தோல்வியடைந்தார். ஸ்டாலின் மொத்தம் 91,303 ஓட்டுகள் பெற்ற நிலையில் ஜேசிடி பிரபாகர் 53,573 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

பிறகு கடந்த 2021ம் ஆண்டில் வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்கிய ஜேசிடி பிரபாகர் மீண்டும் தோல்வியடைந்தார். ஜேசிடி பிரபாகர் மொத்தம் 38,890 ஓட்டுகள் வாங்கிய நிலையில் அவரை எதிர்த்து களமிறங்கிய திமுகவின் வெற்றியழகன் 76, 127 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். பிறகு அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஓ பன்னீர் செல்வம் அணியில் செயல்பட்டு வந்தார். பிறகு ஓ பன்னீர் செல்வம் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் தற்போது அவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+