ஆரம்பிச்சாச்சு.. ஜெயந்தி பத்மநாபனின் "ஹெலிகாப்டர் ஷாட்".. செம அதிரடி.. இது லிஸ்ட்டுலேயே இல்லையே!
சசிகலாவை வரவேற்க தயாராகிறார் ஜெயந்தி பத்மநாபன்
சென்னை: இதோ முதல் பிள்ளையார் சுழியை ஜெயந்தி போட்டுவிட்டார்.. சசிகலாவை 7-ம் தேதி வரவேற்கவும், ஹெலிகாப்டரில் பறந்து பறந்து அவர் மீது பூக்கள் தூவி வரவேற்கவும் அனுமதி வேண்டும் என்று கலெக்டரிடம் மனு தந்துள்ளார்.. குடியாத்தம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏதான் இந்த ஜெயந்தி பத்மநாபன்..!
Recommended Video

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனி தொகுதி. 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த ஜெயந்தி பத்மநாபன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்...
முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பூசலில் தினகரன் அணியில் இணைந்தார் ஜெயந்தி. இதற்காகவே இவரோடு சேர்த்து 18 எம்எல்ஏக்கள் பதவிகள் பறிக்கப்பட்டது.

போட்டி
இதற்கு பிறகு, குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் அமமுக சார்பில் போட்டியிட்டார்.. ஆனால், எம்எல்ஏவாக இருந்தபோது ஜெயந்தி, அந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்ற ஒரு அதிருப்தி அப்போது இருந்தது..

சமாதானம்
அதனால் வாக்கு சேகரிக்க சென்றபோது, ஒருசில இடங்களில் அவரை ஊருக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்திய சம்பவமும் நடந்தது... வாக்குவாதமும் முற்றி போலீஸே வந்து சமாதானம் செய்யும் நிலைமைகூட ஏற்பட்டது.. இதெல்லாம் பழைய விஷயம்தான்.. இப்போது ஜெயந்தி பற்றிய ஒரு புது தகவல் வெளிவந்துள்ளது.. இவர் பிப்ரவரி 3-ம் தேதி வேலூர் கலெக்டர் ஆபீசுக்கு சென்றுள்ளார்.. கலெக்டர் சண்முக சுந்தரத்திடம் ஒரு மனுவையும் தந்துள்ளார்.

வரவேற்பு
அதில், 'சசிகலா தமிழகம் வருவதை முன்னிட்டு, மாதனூர் அடுத்த கூத்தம்பாக்கத்தில் வரவேற்பு அளிக்கவுள்ளேன்.. அப்போது தனியார் வாடகை ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்க உள்ளேன்... அதற்காக பிப்ரவரி 7-ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை ஹெலிகாப்டர் பறக்க அனுமதி வழங்க வேண்டும்" என்று கேட்டு கடிதம் தந்துள்ளார். இப்படி ஒரு மனுவை பார்த்ததும் கலெக்டரே குழம்பிவிட்டார்..!

பாராட்டு
சசிகலா குறித்து எந்த கருத்தும், பாராட்டும் தெரிவிக்க கூடாது என ஏற்கனவே முதல்வர் தரப்பு வாய்மொழி உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வந்த நிலையில், சசிகலாவை வரவேற்க அனுமதி வழங்கப்படுமா? மறுக்கப்படுமா என்று தெரியவில்லை. இந்நிலையில், இந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கட்டும்? என முதல்வர் அலுவலகத்தில் கேட்டுள்ளாராம் கலெக்டர் சண்முகசுந்தரம்.

ஹெலிகாப்டர்
சொந்த கட்சியினருக்கு எடப்பாடியார் எவ்வளவு, எத்தகைய உத்தரவு வேண்டுமானாலும் பிறப்பிக்கலாம்.. ஆனால் மாற்று கட்சியை சேர்ந்தவர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றாலும், ஹெலிகாப்டரில் பறந்து பூ தூவி வரவேற்பதால் வேறு ஏதாவது சிக்கல் வருமா? சட்டம் ஒழுங்கு பாதிக்குமா? என்பதை பற்றியும் யோசித்து முடிவெடுப்பார்கள் என தெரிகிறது. ஆக, சசிகலாவை வானத்தில் இருந்தே பூ மழை தூவி வரவேற்க ஜெயந்தி முதல் படியை எடுத்து வைத்துவிட்டார்.. இனி ஒவ்வொருத்தராக கிளம்பி வருவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை..!
-
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications