ஏப். 16-ல் அதிமுக அவசர செயற்குழு கூட்டம்! இந்த முறையாவது ரத்து செய்யாமல் நடக்குமா?
சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16-ந் தேதி நடைபெறும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் பொறுப்பேற்றார். இதனையடுத்து சென்னையில் ஏப்ரல் 7-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஏப்ரல் 7-ந் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஒரு சில காரணங்களுக்காக ஏப்ரல் 7-ந் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழுக் கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் திடீரென அதிமுக அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16-ந் தேதி சென்னையில் நடைபெறும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தல் , அதிமுக உறுப்பினர் சேர்ப்பு ஆகியவை தொடர்பாக இந்த செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.
கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக 3 இடங்களில் போட்டியிட சீட் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16-ந் தேதி கூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா சட்டசபை பொதுத்தேர்தல் குறித்தும் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும் அதிமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 1.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தாஇமையில் நடைபெறும்.

செயற்குழு உறுப்பினர்களான தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள், தலைமை செயற்குழு உறூப்பினர்கள் (மகளிர்) அனைவரும் உரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications