வருகிறார் ஆதி.. ஸ்டாலினை அவருடைய கோட்டையிலேயே எதிர்கொள்ளும் இபிஎஸ்.. ஜெ. ஸ்டைலில் பரபரக்கும் யுக்தி
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் அதிமுகவின் மூத்த உறுப்பினர் ஆதி ராஜாராம் போட்டியிடுகிறார்.. இதற்கு பின் அதிமுக பெரிய திட்டங்களை வைத்துள்ளது என்கிறார்கள் .
2021 சட்டசபை தேர்தலில் திமுக மொத்தம் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுகவின் உதய சூரியன் சின்னம் 187 இடங்களில் களம் காண்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூரில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பாக அதிமுகவில் ஒரு காலத்தில் கோலோச்சி வந்த ஆதி ராஜாராம் மீண்டும் களமிறங்குகிறார் .

போட்டி
2006லேயே ஆதி ராஜாராம் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டவர் என்ற வரலாறு கொண்டவர். ஸ்டாலினுக்கு அப்போதே கடுமையான போட்டியாக இவர் இருந்தார். கட்சியில் இவர் தேர்தல் பணிகளை செய்து கொண்டு இன்னொரு பக்கம் ஸ்டாலினுக்கு எதிராகவும் நின்றார்.

நம்பிக்கை
அப்போது ஜெயலலிதாதான் ஆதி ராஜாராமை ஆயிரம் விளக்கு தொகுதிக்காக தேர்வு செய்தார். ஜெயலலிதா இவர் மீது பெரிய அளவில் நம்பிக்கை வைத்து இருந்தார். அந்த நம்பிக்கைக்கு ஏற்றபடி வெறும் 2400 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே இதில் ஆதி ராஜாராம் தோல்வி அடைந்தார்.

மீண்டும் வருகிறார்
இந்த நிலையில் அதே ஆதி ராஜாராமை முதல்வர் பழனிச்சாமி களமிறக்கி உள்ளார். ஜெயலலிதா இவரை நம்பினார். ஜெயலலிதாதான் இவரை ஸ்டாலினுக்கு எதிராக களமிறக்கினார். அப்போதே ஸ்டாலினுக்கு இவர் இவ்வளவு கடினமான போட்டியாக இருந்தார்.

நம்பிக்கை
இதனால் அவரையே ஸ்டாலினுக்கு எதிராக மீண்டும் கொண்டு வருவோம் என்று திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் ஆதி ராஜாராமை களமிறக்கி உள்ளார். களநிலவரம் தனக்குத்தான் சாதகமாக இருப்பதாக ஆதி ராஜாராம் நம்புகிறார். கொளத்தூரில் ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு இனியும் இல்லை.

உறுதி
ஸ்டாலினுக்கு கண்டிப்பாக நான் அதிர்ச்சி கொடுப்பேன். அவர் எம்எல்ஏ ஆவதே கடினம் என்று ஆதி ராஜாராம் உறுதியாக குறிப்பிட்டு வருகிறார். ஸ்டாலினை அவருடைய சொந்த கோட்டையிலேயே ஆட வைக்கும் அளவிற்கு ஆதி ராஜாராமை எடப்பாடி பழனிசாமி களமிறக்கி உள்ளார் என்கிறார்கள். இதற்கான தேர்தல் பணிகளை ஏற்கனவே ஆதி ராஜாராம் தொடங்கிவிட்டார் .

பிரச்சாரம்
ஸ்டாலினுக்கு எதிராக தெரு தெருவாக ஆதி ராஜாராம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் பலரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த முறை கண்டிப்பாக ஸ்டாலினுக்கு இவர் அதிர்ச்சி கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறுகிறார்கள். இதனால் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு டப் பைட் இருக்கும் என்கிறார்கள்.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications