கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. ஐகோர்ட்டை நாடிய அதிமுக
சென்னை: மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்க்கு எதிராக திமுகவும் டிஜிபியிடம் புகாரளித்துள்ளது. இந்த நிலையில், அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக வழக்கறிஞர் திரிசூலி என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 16ஆம் தேதி டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் தனது மனு மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.. குற்றம் நடைபெற்றதாக நாங்கள் கூறவில்லை. எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியுள்ளார். மேலும் பெண் மாவட்ட ஆட்சியரின் மரியாதை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் பதிவிடுபவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ என்பதால் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க முடியாது.
பொதுவெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும். எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யும்படி டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி எஸ்பிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
