“திமுக பாஜக இடையே இப்போதும் மறைமுக உறவு”.. பாஜகவை கூட்டணியில் வைத்துக்கொண்டே சொன்ன ஜெயக்குமார்!
சென்னை: "திமுக - பாஜக இடையே இப்போதும் ஒரு மறைமுக உறவு, எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பாஜகவுக்கு முழு ஆதரவை திமுக நிச்சயம் வழங்கும். நாங்கள் அடிப்பது போல் அடிக்கிறோம். நீங்கள் அழுவது போல் அழுங்க" என்பதுதான் திமுக இடையிலான டீலிங்" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக - அதிமுக உடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையில், பாஜக - திமுக இடையே ரகசிய டீலிங் உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு இயக்கம். எல்லோரும் சமம் என்பதே எங்கள் கொள்கை.
அதேசமயம் கோயில்களில் காலங்காலமாக என்ன மரபுகள் பின்பற்றப்படுகிறதோ, அந்த நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், இது குறித்து மேலும் கருத்து கூற இயலாது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விரிவாக இந்த கருத்து குறித்துதான் பேசியுள்ளார்" என்று விளக்கம் அளித்தார்.
மேலும் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதால் ஜெயக்குமார் வெட்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்தது குறித்துக் கேட்டபோது, "நாங்கள் யாருடைய காலிலும் விழவில்லை. தி.மு.க.தான் டெல்லிக்குச் சென்று பா.ஜ.கவின் காலில் விழுந்து கிடக்கிறது. திமுகவிற்கும் பாஜகவுக்கும் இடையே இப்போதும் ஒரு மறைமுக உறவு, எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பாஜகவிற்கான முழு ஆதரவை தி.மு.க நிச்சயம் வழங்கும்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய ஜெயக்குமார், "ஒரு படத்தில் தியேட்டர் லைசென்ஸ் வாங்குவதற்காக, அதிகாரி முன்னாள் கலெக்டரா இருந்தாலும் விடமாட்டேன்' என்று வெளியே வீரவசனம் பேசுவார் கவுண்டமணி. ஆனால், உள்ளே சென்றதும் அதிகாரியின் காலில் டமார் என்று விழுந்து, 'ஐயா எப்படியாவது லைசென்ஸ் கொடுத்துடுங்க' என்று கெஞ்சுவார். அதுபோலத்தான் திமுகவும் செயல்படுகிறது.
நாங்கள் அடிப்பது போல் அடிக்கிறோம்.. நீங்கள் அழுவது போல் அழுங்க" என்பதுதான் திமுக - பாஜக இடையிலான டீலிங். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது திமுகவின் வழக்கம். அதிமுகவினருக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, கூட்டணி கட்சியான பாஜக மறைமுகமாக திமுகவோடு கூட்டணி வைத்திருப்பதாகப் பகிரங்கமாகத் தெரிவிக்கிறீர்களே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் பாஜகவை விமர்சிக்கவில்லை. திமுகவைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன்" எனத் தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications