‛டிஜே வாழ்க கோஷம்’.. ரோட்டில் காரை நிறுத்தி மாட்டு வண்டி ஓட்டிய ஜெயக்குமார்! இழுத்துட்டு ஓடிய மாடு
சென்னை: சென்னையில் இன்று நடுரோட்டில் திடீரென்று காரை நிறுத்தி இறங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து ஓட்டி சென்ற வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது அவர் அதிமுகவில் அமைப்பு செயலாளராகவும், வடசென்னை தென்கிழக்கு மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

அதிமுக விவகாரங்கள் தொடர்பாக அடிக்கடி இவர் பத்திரிகையாளர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். மேலும் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கும் இவர் தான் அதிமுக சார்பில் பதிலடி கொடுத்து வருகிறார்.
மேலும் சீரியசான அரசியல்வாதியாக இருக்கும் இவருக்கு இன்னொரு முகமும் உள்ளது. குறிப்பாக மேடைகளில் அவ்வப்போது எம்ஜிஆர் பாடல்களை பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தான் டி ஜெயக்குமாரின் இன்றைய செயல் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதாவது சென்னை உள்பட மாநிலம் முழுவதும் வாக்காள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான முகாம் நடந்தது. இந்த முகாமை இன்று சென்னையில் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பார்வையிட்டார். அதன்பிறகு அவர் தனது காரில் அந்த முகாமில் இருந்து வேறு இடத்துக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னை பழைய வண்ணாரபேட்டை சாலையில் அவரது கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் ஒற்றை மாட்டு வண்டி சென்றது. இதை பார்த்த ஜெயக்குமார் தனது காரில் இருந்து இறங்கினார். அதன்பிறகு அவர் அந்த மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து ஓட்டினார். நாட்டில் டீசல் விலை அதிகரித்துள்ளதாலும், திமுக டீசல் விலையை குறைப்பதாக கூறிவிட்டு குறைக்காமல் இருக்கும் நிலையில் இந்த பயணம் தான் சரியானது என கூறியபடி சென்றார்.

தொடக்கத்தில் மிகவும் மெதுவாக ஓடிய மாடு, சிறிது நேரத்தில் வேகமாக ஓட தொடங்கியது. இதையடுத்து அவர், ‛‛பொறுமை.. பொறுமைப்பா'' எனக்கூறி மகிழ்ச்சியாக சிறிது தூரம் மாட்டு வண்டியில் பயணம் செய்தார். இந்த வேளையில் அவர் மாட்டு வண்டியில் அமர்ந்து ஓட்டி சென்றபோது அவருக்கு இருபுறமும் 2 பேர் ஓடி வந்தனர்.
அவர்கள் ‛‛அண்ணன் டிஜே வாழ்க.. அண்ணன் டிஜே வாழ்க..'' என கோஷமிட்டபடி பின்தொடர்ந்து ஓடினர். இந்நிலையில் தான் சென்னையில் மாஜி அமைச்சர் டிஜே ஜெயக்குமார் மாட்டு வண்டி ஓட்டி செல்லும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications