மீண்டும் பாஜகவுக்கு ‘டைவ்’ அடித்த அதிமுக மாஜி எம்.பி! ஓபிஎஸ், எடப்பாடிக்கு டாட்டா காட்டிய மைத்ரேயன்!
சென்னை : அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே பாஜகவில் இருந்த அவர் அதிமுகவில் சேர்ந்து எம்.பி ஆனார். இந்நிலையில், தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.
1999ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர் டாக்டர் மைத்ரேயன். அதிமுகவில் இணைவதற்கு முன்பு தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு முக்கிய பதவிகளில் மைத்ரேயன் இருந்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாக உடைந்தது. அந்தச் சமயத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவரது அணியில் இருந்து வந்தார் மைத்ரேயன்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் மோதலுக்கு மத்தியில் மைத்ரேயன், எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றார். அங்கு அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், அதிருப்தி அடைந்து ஓபிஎஸ்ஸை சந்தித்தார். இதையடுத்து ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.
இதனால்,கடந்தாண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, அதிமுகவில் இருந்து மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டார். இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பிலும் ஒட்டாமல் ஒதுங்கி இருந்து வந்த மைத்ரேயன் பாஜகவில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளருமான சிடி ரவி முன்னிலையில், பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளார் மைத்ரேயன்.
பாஜகவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வரும் மைத்ரேயன் கூடியவிரைவில் அக்கட்சியில் இணைவார் என சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் டெல்லியில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்துள்ளார்.

அமித்ஷா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை இரவு தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் மைத்ரேயனை பாஜகவில் சேர்த்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அதிமுகவுக்கு தாவினர். இந்நிலையில், அதிமுக மாஜி எம்.பியை தங்கள் பக்கம் இழுத்துள்ளது பாஜக.
-
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications