தொகுதி பங்கீடு நடத்த அதிமுகவில் குழு அமைப்பு.. தேர்தலையொட்டி கமிட்டிகள் அமைத்து எடப்பாடி உத்தரவு!
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆகியவற்றை அமைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலர் இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்பி உதயகுமார், வைகைச்செல்வன் ஆகிய 10 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழுவை அமைத்துள்ளது அதிமுக.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன், முன்னாள் அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி, முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தேர்தல் பிரச்சாரக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைப்பு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. 1 (2) pic.twitter.com/nQMYzRRS5f
— AIADMK (@AIADMKOfficial) January 22, 2024
அதேபோல, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி வி ஆர் ராஜ் சத்யன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விபிபி பரமசிவம், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் ஆகியோர் அடங்கிய தேர்தல் விளம்பர பணிகளுக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications