கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு!
திருப்பூர்: திருப்பூர் அருகே, வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகி ஒருவர், விசிலை பிடுங்கி தூக்கி வீசிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. விசில், தவெகவின் தேர்தல் சின்னமாக இருக்கும் நிலையில், அதனைப் பிடுங்கி வீசியுள்ளார் அதிமுக நிர்வாகி.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாள் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. முக்கிய அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்கலத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், மேளதாளம் இசைக்கப்பட்டபோது விசில் பயன்படுத்தப்பட்டது. இதைக்கண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரகுமார், விசில் தவெகவின் சின்னம் எனக் கூறி அதை பிடுங்கி தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்லடத்தை அடுத்த மங்கலத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். மேளதாளம் வாசிப்பவர் விசில் ஒன்றை கழுத்தில் அணிந்திருந்த நிலையில், அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிமுக நிர்வாகி மகேந்திரகுமார் அந்த விசிலை பிடுங்கி தூக்கி வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! என்ன நடக்கும்? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
"கரண்ட் போனால் என்ன? விஜய்யை கேட்டா வந்துருமா?" என் வீட்டுல இருக்கு! வினோதமாக பேசிய மாஸ்டர் மகேந்திரன் -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்!











Click it and Unblock the Notifications