கலைஞர் காசு.. அதிமுகவை சீண்டிய பாஜக! ’பாஜக பச்சோந்திகள்’ நாரயணன் திருப்பதியை விளாசிய காயத்ரி ரகுராம்
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பாஜக கலந்து கொண்டது குறித்து 'கள்ள உறவு” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான பாஜகவை திமுக அழைத்தது என தமிழக பாஜக துணை தலைவர் நாரயணன் திருப்பதி கூறியிருந்த நிலையில், பாஜகவினரை பச்சோந்திகள் என நடிகையும் அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் ஆன கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த 2023 ஜூன் மூன்றாம் தேதி முதல் ஓராண்டாக தமிழக அரசு மற்றும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல நிகழ்வுகளும் நடந்தன.

அந்த வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தது. தொடர்ந்து மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் நாணய வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் கலந்து கொண்டு 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட அதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்றது, நூற்றாண்டு நினைவு நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட்டது என, பாஜகவும் திமுகவும் கள்ளக் கூட்டணியில் இருப்பதாக விமர்சித்து இருந்தார் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி.
இது தொடர்பாக கோவையில் பேசிய அவர்,”அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அப்போது பாஜகவுடன் கூட்டணியில் இருந்தும் அவர்களை அழைக்கவில்லை. நாங்களே தான் வெளியிட்டோம். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுவதும், நாணயம் வெளியிடுவதும் அவர்களின் விருப்பம். அதை யார் வெளியிடுவது என்பதுதான் கேள்வி. ஏன் ராகுல் காந்தியை அழைத்து வெளியிடவில்லை. ஆக இதில் இருந்து திமுக – பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.” என கூறியிருந்தார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி கருத்து குறித்து தமிழக பாஜக துணை தலைவர் நாரயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து கூறி இருந்தார். அதில்,"எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் நாணயம் வெளியிட்டபோது நாங்கள் ஆட்சியில் இருந்தும், பாஜக வை அழைக்கவில்லை. ஆனால், கருணாநிதி நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜக வை அழைத்தது ஏன்? என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவின் போது தமிழகத்தின் அன்றைய பிரதான எதிர்க் கட்சியான திமுகவை அழைத்தது அதிமுக. கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவின் போது தமிழகத்தின் இன்றைய பிரதான எதிர்க் கட்சியான பாஜகவை அழைத்தது திமுக. அவ்வளவுதான்" என கூறியிருந்தார்.

இந்நிலையில் பாஜக நாரயணன் திருப்பதிக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜகவினரை பச்சோந்திகள் என நடிகையும் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளருமான காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில்,”அ.தி.மு.க., வாழ்க்கையில் செய்த சிறந்த விஷயம், பா.ஜ.,வை அழைக்காததுதான். இல்லையேல் மைக்கைப் பிடித்து இங்கே பூசு அப்பறோம் அங்க பூசு என்று சொல்லியிருப்பார்கள், அவர்கள் தமிழக அரசியலில் இருக்க தகுதியற்ற பச்சோந்திகள். அவர்கள் காரியகர்த்தாக்கள் அல்ல, அவர்கள் "வெட்கமற்ற காரியவாதிகள்" மட்டுமே. பாஜகவுக்கும் தமிழகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, பாஜகவுக்கும் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.” என கூறியுள்ளார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications