செந்தில் பாலாஜியை தூக்கி சாப்பிட்ட சிவி சண்முகம்.. திமுகவின் அணைக்கட்டை அள்ளிய சாமர்த்தியம்!
Recommended Video
சென்னை: வேலூர் தொகுதி தேர்தலில் திமுக வெற்றியை பெற்றிருப்பினும், அணைக்கட்டு தொகுதியில் அதிமுகவின் வெற்றியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், சிவி சண்முகம்தான் என்பதை ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
வேலூர் மக்களவை தொகுதி என்பது வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
இதில் திமுக ஆகட்டும், அதிமுக ஆகட்டும்.. அணைக்கட்டு தொகுதியில்தான் அதிகமாக உழைத்தார்கள். திமுக சார்பில் அணைக்கட்டு தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டிருந்தார்.

சிவி சண்முகம்
அதேபோல, அதிமுக சார்பில் அமைச்சர் சிவி சண்முகம் பொறுப்பில் இருந்தார். தம்பிதுரை முதல் எத்தனையோ பேரின் வெற்றிக்கு உதவிய செந்தில் பாலாஜி, இங்கு களமிறக்கப்பட்டதும் எப்படியும் திமுக இங்கு வெற்றிபெற்று விடும் என்றுதான் கணிக்கப்பட்டது. அது மட்டுமில்லை, இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதும் திமுகதரப்புதான்.

வாக்கு பதிவு
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி நடந்த தேர்தலில், 60,000- க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகவில்லை என்று சொல்லப்பட்டது. அதனால் இந்த தொகுதியின் முடிவு பெரிய விஷயமாக எதிர்பார்க்கப்பட்டது

அணைக்கட்டு
இந்தத் தொகுதியில், செந்தில் பாலாஜியையே தூக்கி சாப்பிட்டு விட்டார் சிவி சண்முகம். அவரது உழைப்பு கடுமையாக இருந்தது. அதனால்தான் அணைக்கட்டு தொகுதியில் மட்டும் திமுகவை விட 10 ஆயிரம் வாக்குகளை அதிகம் அதிமுக பெற்றுள்ளது. . இதைவிட அதிர்ச்சி, இந்த பகுதியில் வன்னியர்கள் அதிகம். அதனால் எப்படியும் துரைமுருகனுக்கு சாகமாகவே இந்த தொகுதி அமையும் என்றும் கருததப்பட்டது.

சபாஷ் அமைச்சர்
ஆனால் திமுக எம்எல்ஏ இருந்தும், வன்னியர் வாக்குகள் நிறைந்து இருந்தும்.. ஏன் செந்தில்பாலாஜியே இருந்தும்.. சிவி சண்முகம் இங்கு இறங்கி தூர்வாரி இந்த தொகுதியை அதிமுக பக்கம் திருப்பி லட்டு போல கையில் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கதே!
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications