திமுக வேட்பாளர் மீது கிளம்பிய மோசடிப் புகார்.. அமைச்சர் ஜெயக்குமார் ஹேப்பி!
சென்னை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுவதால், ராயபுரம் தொகுதி நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது, திமுக சார்பில் மூர்த்தி என்ற வேட்பாளரஹை ராயபுரம் தொகுதியில் நிறுத்தியுள்ளது திமுக.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராயபுரத்தில் ஓசன் மாரத்தான் எனும் போட்டி நடைபெற்றது, இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக ஜெயக்குமார் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தற்போது ராயபுரத்தில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் ஐடிரீம் மூர்த்தியும் பங்கேற்று மீன்வளத்துறை அமைச்சரை பாராட்டி பேசியுள்ளார் என்பது சுவாரஸ்யமானது. அதை விட வேட்பாளர் மூர்த்தி, அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மக்களுக்கு செய்த நன்மைகளையும், அமைச்சரின் ஆளுமை குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளார்.
இதற்கிடையே, ஐடிரீம் மூர்த்தி மீதான ஒரு வீடு மோசடிப் புகார் காரணமாக அதிமுக தரப்பு மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. இதுதொடர்பாக திமுகவை சேர்ந்த ஒருவர் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம். அதில் நாங்கள் வசித்து வந்த வீட்டினை மூர்த்தி விலைக்கு கேட்டதாகவும், ஆனால் நாங்கள் மறுக்கவே வலுக்கட்டாயமாக தங்கள் வீட்டினை இடித்து விட்டு, மூர்த்தி வீட்டின் கார் பார்க்கிங் ஏரியாவாக அந்த இடத்தை மாற்றியுள்ளதாகவும். மூர்த்திக்கு சீட் கொடுக்க கூடாது என தங்கள் தலைமையிடம் முறையிட்டதாகவும் அது நடக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மூர்த்தி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் பட்டா இல்லாத பல வீடுகளை சேர்ந்த மக்களுக்கு ஆபத்து எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம். தற்போது இதை வைத்தே அதிமுகவினர் தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் காரணமாக ஜெயக்குமாரின் வெற்றி வாய்ப்பை திமுக வேட்பாளரின் செயலே உறுதிப்படுத்தி விட்டதாகவும் அதிமுகவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
-
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை












Click it and Unblock the Notifications