''வனவிலங்கு சரணாலயத்திலிருந்து தப்பி வந்த ஜந்து போல் அண்ணாமலை''! அதிமுக ஆக்ரோஷ அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வனவிலங்கு சரணாலயத்திலிருந்து தப்பி வந்த ஜந்து போல் அண்ணாமலை இருப்பதாக அதிமுக ஆக்ரோஷமான முறையில் அட்டாக் செய்துள்ளது.

பாஜகவை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டாலும் அக்கட்சி குறித்தோ, அக்கட்சியின் தலைவர்கள் குறித்தோ வாயே திறக்காமல் மவுனம் சாதித்து வந்த அதிமுக இப்போது திடீரென இறங்கி அடிக்க ஆரம்பித்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் அண்ணாமலையை லேகியம் விற்பவரோடு ஒப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல் அடித்தார். இப்போது என்னவென்றால் அண்ணாமலையை பார்த்தால் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து தப்பி வந்த ஜந்து போல் இருப்பதாக பேசியிருக்கிறார் வைகைச்செல்வன்.

AIADMK has aggressively attacked Annamalai as an escaped animal from a wildlife sanctuary.

பிரதமர் மோடி குறித்து எடப்பாடி பழனிசாமியோ அல்லது அதிமுக முன்னணி பிரமுகர்களோ இது வரை வாயே திறக்காத நிலையில், முதல் முறையாக வைகைச் செல்வன் மூலம் மோடி மீதான அட்டாக்கை ஆரம்பித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது அவர் பேசியதை சுட்டிக்காட்டி நக்கல் நையாண்டியாக இந்தியில் பேசி கிண்டல் அடித்திருக்கிறார் வைகைச் செல்வன். மேலும், தமிழ்நாட்டில் பாஜகவின் பருப்பு வேகாது எனவும் காட்டமாக பேசியுள்ளார். இதன் மூலம் அதிமுக பாஜக இடையேயான வார்த்தை யுத்தம் தீவிரம் அடைந்து வருவது தெரிகிறது.

வடநாட்டில் மட்டும் தான் மோடியை கடவுளாக கும்பிடுகிறார்கள் என்றும் தமிழ்நாட்டில் பாஜக என்ன செய்தாலும் யாரும் மதிக்கமாட்டார்கள் எனவும் தமிழ்நாட்டில் பகுத்தறிவு பகலவன் பெரியார் போட்ட விதையே இதற்கு காரணம் எனவும் பேசி பிரதமர் மீது வார்த்தை தாக்குதல் நடத்தியுள்ளார் வைகைச்செல்வன். இதன் மூலம் இனி நீயா? நானா? என மோதிப்பார்ப்போம் என்ற முடிவுக்கு அதிமுக வந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

இதனிடையே அண்ணாமலை பற்றி பேசும் போது ஒரு கட்டத்தில் ஒருமையில் சாடிய வைகைச்செல்வன், வனவிலங்கு சரணாலயத்திலிருந்து தப்பி வந்த ஜந்து போல் அண்ணாமலை இருப்பதாக விமர்சித்தார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 2% ஓட்டுக்கூட கிடையாது என்று கூறிய வைகைச் செல்வன், அண்ணாமலையை எங்கிருந்து தேடிப்பிடித்து பாஜகவில் பதவி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றார். தமிழ்நாட்டில் பாஜக கடை போட்டால் வியாபாரம் ஆகாது என்பதால் கடையை மூடிவிட்டு வேறு மாநிலத்துக்கு சென்றுவிட வேண்டியது தான் என விமர்சித்தார். இதனிடையே இனி வரும் நாட்களில் அதிமுக மீதான அட்டாக்கை பாஜகவும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+