1998 முதல் 2024 வரை பாஜக vs அதிமுக.. இதுவரை என்ன நடந்தது.. டைம்லைன் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 தேர்தலுக்கு முன்பாக பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக அதிமுக பாஜக இடையேயான உறவு எப்படி இருந்தது என்பது பற்றி டைம் லைனை பார்ப்போம்.

பாரதிய ஜனதா கட்சியும் தென்மாநிலத்திலேயே வலுவான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையே இருந்து வந்த நான்கு ஆண்டுகால கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. பாஜக மாநில தலைமை உடன் அண்மைக்காலமாக நடந்த மோதல்கள் காரணமாக, கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

AIADMK has dropped BJP ahead of 2024 polls, a review of their ties over the years | Timeline

அதேநேரம் 2024 லோக்சபா தேர்தலை பாஜக இல்லாமல் மற்ற கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி சந்திப்போaம் என்பதை அதிமுக தெளிவாக கூறியிருக்கிறது. இதன் மூலம் 8 மாதங்கள் கழித்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்பதை அதிமுக தெளிவுபடுத்தி உள்ளது. இதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக அறிவித்திருக்கிறது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அண்மையில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து, பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகளால் கூட்டணி பாதிக்கப்படும் என்பதை எச்சரித்தனர். அடுத்த சிலநாளில் கூட்டணியை அதிமுக முறித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவிற்கு அதிமுக உடனான இந்த கூட்டணி முறிவு தேசிய அளிவல் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள்.

பாஜக-அதிமுக கூட்டணியின் டைம் லைன்களை இப்போது பார்ப்போம்.

1998ல் அதிமுக-பாஜக முதல் கூட்டணி: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக, முதல்முறையாக பாஜக உடன் 1998 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றியது. ஆனால், அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவின் ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தார்.

1999: இதையடுத்து அதிமுக காங்கிரசுடன் கைகோர்த்தது, பாஜகவுடன் திமுக இணைந்தது தேர்தலை சந்தித்தது.

1999 ஆம் ஆண்டில், அதிமுகவும் காங்கிரஸும் கைகோர்த்தபோது, அடுத்த பொதுத் தேர்தலில் 39 இடங்களில் 26 இடங்களை வென்ற கருணாநிதியின் திமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. ஆனால் 2003ல் கூட்டணியில் இருந்து விலகிய திமுக, மீண்டும் கூட்டணி சேரவில்லை.

2004ல் மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி சேர்ந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி சேர்ந்தது.

2004ல் மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதும் அந்த கூட்டணி தமிழகத்தில் பூஜ்ஜிய இடங்களைப் பெற்றது. திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வென்றது. அப்போதிருந்து, பாஜக கூட்டணியை அதிமுக விரும்பியதே இல்லை. ஜெயலலிதா எந்த காலத்திலும் பாஜக உடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று அதன்பின்னர் அறிவித்தார். அதன்படியே 2016 வரை அதாவது தான் மறையும் வரை அதிமுக உடன் கூட்டணி அமைக்கவே இல்லை.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் 2019ல் பாஜக-அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்தன. 2019-ல் தமிழகத்தில் பாஜக எங்குமே வெற்றி பெறவில்லை. அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் திமுக கூட்டணி 39 இடங்களில் 38 இடத்தில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தில் 234 இடங்களில் 133 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, அதே நேரத்தில் அதிமுக 66 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

2019-2023: பாஜக-அதிமுக கூட்டணி எப்படி இருந்தது.. அதிமுக பாஜக கட்சிகளின் சித்தாந்தத்தில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் கூட்டணி நீடித்தே வந்தது. பாஜக-அதிமுக கூட்டணியில் அண்ணாமலை பாஜக மாநில தலைவர் ஆகும் முன்பு வரை எந்த பிரசச்னையும் இல்லாமல் இருந்தது.ஆனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வந்த பிறகு படிப்படியாக அதிமுக பாஜக இடையே உறவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் பாஜகவினர் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அதற்கு பதிடியாக ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்னர் அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்தது, ஜெயலலிதா ஊழால் தண்டிக்கப்பட்டதாக பேசியது,. அண்ணாவை விமர்சித்தது போன்றவை அதிமுகவை கோபத்தில் ஆழ்த்தியது. ஏற்கனவே பாஜக தான் சட்டசபை தேர்தல் தோல்விக்கு அதிருப்தியில் இருந்த அதிமுகவினர் இந்த விமர்சனங்களால் கோபம் அடைந்தனர். பல அதிமுக தலைவர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அந்த பொறுப்பில் இருந்து மாற்ற வேண்டும் என்று டெல்லி பாஜக தலைமைக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆனாலும் டெல்லி மேலிடம் நடவடிக்கை எடுக்கவில்லை.

செப்டம்பர் 25, 2023 - பாஜக-அதிமுக கூட்டணி முறியு

இதையடுத்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (என்டிஏ) வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் தனி அணியை உருவாக்க போவதாக அறிவித்துள்ளது அதிமுக.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+